சில வகையான சைடிஷ்கள் நாம் செய்யும் பொழுது அதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, ஆப்பம் ஏன் பழைய சாதத்திற்கும் கூட அசத்தலாக வைத்து சாப்பிடலாம். அப்படி ஒரு சைடிஷ் தான் தக்காளி பச்சடி. நல்ல புளிப்பும் காரமாக இருக்கும் இந்த பச்சடி எதனுடன் வைத்து சாப்பிட்டாலும் அளவுக்கு மீறி சாப்பிடும் அளவிற்கு சுவை அமிர்தமாக இருக்கும். வாங்க காரசாரமான ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
முதலில் ஒரு எலுமிச்சை பல அளவு புளியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் ஆறு நன்கு பழுத்த தக்காளி பழத்தை நான்காக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நான் ஊறவைத்த புளி தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக அதை மிக்ஸி ஜாரின் 10 பல் வெள்ளை பூண்டு, நான்கு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி தனியா தூள் சேர்த்து தண்ணீர் கலக்காமல் நன்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுந்து சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நான்கு முதல் ஐந்து சாய்ந்த வத்தல், பத்து வெள்ளைப் பூண்டு, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.
இந்த தாளிப்பில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயோடு சேர்த்து தக்காளி விழுதுவை நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் நன்கு தக்காளி தொக்கு கொதித்து வரவேண்டும். தக்காளி தொக்கு நன்கு சுண்டி கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் தொக்கு தயாராக மாறிவிட்டது. இதை காற்று புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
இந்த தொக்கு ஒன்று போதும் சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம் என அனைத்திற்கும் அருமையாக வைத்து சாப்பிடுவிடலாம். விடுதிகளில் தங்கி படிப்பவர்களுக்கு தினமும் வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த தக்காளி தொக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
1 thought on “ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி! காரசாரமான ரெசிபி இதோ!”
Comments are closed.