மூன்று முட்டை போதும்…..நான்கு முதல் ஐந்து நபர் திருப்தியாக சாப்பிடும் அளவிற்கு வித்தியாசமான முட்டை தொக்கு ரெசிபி!

எந்த குழம்பு வைத்தாலும் நம் வீட்டில் முட்டை ஒன்று இருந்தால் போதும் சைடிஸ்க்கு பஞ்சமே இருக்காது. அதே நேரத்தில் முட்டை வைத்து ஒரு ரெசிபி செய்யும் பொழுது சுவையில் எப்பொழுதும் போல அல்லாமல் சற்று வித்தியாசமாகவும் காரசாரமாகவும் பார்ப்பதற்கு தன்னைக் கவரும் விதத்தில் இருந்தால் சாப்பிட அடம் பிடிப்பவர்கள் மீண்டும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு திருப்தியாக இருக்கும். அந்த வகையில் இன்று மூன்று முட்டை வைத்து நான்கு முதல் ஐந்து பேர் திருப்தியாக சாப்பிடும் அளவிற்கு அருமையான மற்றும் வித்தியாசமான முட்டை தொக்கு ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த முட்டை கலவை வைத்து பணியாரம் செய்ய வேண்டும். அதாவது ஒரு பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதன் குழியில் நான் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை சேர்த்துக் கொள்ளலாம்.

நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது முட்டை பணியாரம் தயார். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்வதற்காக அரைத்தமிழர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடத்தில் மசாலா நன்கு கொதித்து தொக்கு பதத்திற்கு வந்துவிடும்.

ஐந்தே நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் சுவையில் இன்ஸ்டன்ட் வெங்காய ஊறுகாய்! காரசாரமான ரெசிபி இதோ…

இந்த நேரத்தில் பொன்னிறமாக பொரித்து வைத்திருக்கும் முட்டை பணியாரத்தை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவுடன் இணைந்து பணியாரம் நன்கு ஒரு சேர கிளற வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டை தொக்கு தயார்.

இந்த முட்டை தொக்கு வழக்கமான முட்டை மசாலா போல அல்லாமல் முட்டையை பணியாரமாக செய்து அதன் பின்பு தொக்கு வைப்பதால் சுவை சற்று கூடுதலாகவும் மூன்று முட்டை வைத்து செய்யும் பொழுது குறைந்தது நான்கு முதல் ஐந்து பேர் சாப்பிடும் அளவிற்கு குழம்பு பக்குவமாகவும் கிடைத்துவிடும். சூடான சாதத்தில் இந்த குழம்பு ஒன்று வைத்து சாப்பிட்டால் போதும் வேறு எந்த சைட் டிஷ்சும் தேவைப்படாது.
சாதம் மட்டும் அல்லாமல் தோசை , சப்பாத்தி என அனைத்திற்கும் இந்த முட்டை தொக்கு கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.

Exit mobile version