ஒரு துளி கூட நெய் சேர்க்காமல் வீடே மணக்க மணக்க அவல் வைத்து அருமையான அல்வா ரெசிபி!

வாயில் வைத்ததும் கரையும் இனிப்பு வகைகளில் ஒன்றுதான் அல்வா. ஆனால் இந்த அல்வா செய்வதற்கு அதிகப்படியான நெய் அல்லது எண்ணெய் பயன்படுத்த வேண்டியது இருக்கும். இதன் காரணமாகவே சிலர் இந்த அல்வாவை விரும்புவது இல்லை. ஒரு துளி கூட நெய் அல்லது எண்ணெய் சேர்க்காமல் அல்வா செய்தால் இந்த அல்வா சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். அந்த வகையில் அவள் வைத்து நெய் சேர்க்காமல் வீடே மணக்கும் அல்வா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

இந்த அல்வா செய்வதற்கு தட்டையான வெள்ளை அவலை பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் ஒரு கப் வெள்ளை அவல் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கப் அவல் இருக்கு ஒன்றரை கப் அளவு தேங்காய் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றரை கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் மிக்ஸியில் பொடி செய்த அவல் சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.

இதை அடுத்து ஒரு அகலமான கடாயில் முக்கால் கப் தூள் வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து ஒரு கொதி வந்ததும் நாம் கலந்து வைத்திருக்கும் அவல், தேங்காய்ப்பால் கரைசலை சேர்த்துக் கொள்ளலாம்.
வெல்லத்துடன் அவல், தேங்காய்ப்பால் கரைசல் சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து தொடர்ந்து பத்து நிமிடம் கலந்து கொடுக்க வேண்டும். தொடர்ந்து பத்து முதல் 15 நிமிடம் கிளரும் பொழுது நன்கு கெட்டியாகி அல்வா பதத்திற்கு திரண்டு வரும்.

ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி! காரசாரமான ரெசிபி இதோ!

இந்த அல்வா செய்வதற்கு நெய் அல்லது எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நாம் தேங்காய் பால் பயன்படுத்தி அல்வா செய்வதால் தேங்காய் பாலில் இருந்து வரும் எண்ணையே போதுமானதாக இருக்கும்.

அவல் அல்வா பதத்திற்கு கெட்டியாக வந்ததும் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம், பிஸ்தா போன்றவற்றை சேர்த்து கிளறி கொள்ளலாம். இறுதியாக அவல் அல்வா தயார். இந்த அல்வா சுவையானதாக மட்டும் இல்லாமல் நெய் சேர்க்காத காரணத்தினால் சத்து நிறைந்ததாகவும் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்ட அமலும் இருக்கும்.

Exit mobile version