கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரை இனி விருப்பப்படும் நேரங்களில் நம் வீட்டிலேயே செய்யலாம்!

விசேஷ நாட்களில் கோயில்களில் சாமி தரிசனத்திற்கு பிறகு கோயில்களில் பரிமாறப்படும் பிரசாதத்தை சாப்பிடுவதற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் சர்க்கரைப் பொங்கலை விட காரசாரமாக கருவேப்பிலை வாசலில் சிறிதளவு கொடுக்கப்படும் புளியோதரைக்கு நிகர் எந்த சுவையும் இல்லை. இப்படி கோயில்களில் உதிரி உதிரியாக நல்லெண்ணெய் வாசத்தில் வழங்கப்படும் பிரசாதத்தை நம் வீட்டில் செய்ய வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க பெருமாள் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரை நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் முதலில் இரண்டு தேக்கரண்டி மிளகு நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே இரண்டு தேக்கரண்டிக்கு வெள்ளை எள் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். அடுத்து இரண்டு தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரியும் வரை வருத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதைத்தொடர்ந்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வெந்தயத்தின் நிறம் மாறும் வரை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி கடுகு, நான்கு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். இதில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

பஞ்சு போல புசுபுசு இட்லிக்கு இதைவிட சிறந்த சைடிஷ் இருக்கவே முடியாது… ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இட்லி பொடி ரெசிபி!

கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலையின் நிறம் மாறியதும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த கெட்டியான புளி கரைசல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த புளி கரைசல் மீது ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது கூடுதலாக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை கொதிக்க விட வேண்டும்.

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதித்து மசாலா கெட்டியாக வரும் நேரத்தில் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் கொடியை இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அடுப்பை அணைத்து விடலாம்.

நாம் தயார் செய்து வைத்திருக்கும் தொக்கு சிறிது நேரம் சூடு தணிந்ததும் நாம் வடித்து ஆற வைத்திருக்கும் சாதத்தை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சொக்கோடு சாதத்தை கிளரும் பொழுது ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தை உடைக்காதவாறு பதமாக கிளறி கொடுக்கலாம்.

இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை தூவி கிளறி இறக்கினார் சுவையான கோயில் புளியோதரை தயார்.