காரைக்குடி ஸ்டைலில் சுவையான சுண்டைக்காய் பச்சடி!

காய்களிலேயே சிறிய காயான சுண்டைக்காய் சத்துக்கள் நிறைந்த களஞ்சியமாக இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! நுண் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடம் இந்த சுண்டைக்காய் என்று சொல்லலாம். வைட்டமின் சி நிறைந்தது இந்த சுண்டைக்காய். வயிற்று சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய ஆற்றல் இந்த சுண்டைக்காய்க்கு உண்டு. செரிமான சக்தியையும் அதிகரிக்கும் இந்த சுண்டைக்காயை வைத்து எப்படி சுவையான காரைக்குடி ஸ்டைல் சுண்டைக்காய் பச்சடி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கோவில் பிரசாதம் சுவையில் சூப்பரான தயிர் சாதம்! வீட்டில் செய்து அசத்துங்கள்…

சுண்டைக்காய் பச்சடி செய்வதற்கு முதலில் இரண்டு மேஜை கரண்டி துவரம் பருப்பை அதிகம் குழைந்து விடாமல் அரை பதமாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் காயவைத்து அதில் நான்கு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே 100 கிராம் அளவு சுண்டைக்காயை நறுக்கி இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

சுண்டைக்காய் மற்றும் வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். இது நன்றாக கொதிக்க வேண்டும்.

சிறிதளவு புளி மற்றும் உப்பை நன்கு கரைத்து சுண்டைக்காயில் தண்ணீர் வற்றி வரும்பொழுது இந்த கரைசலை ஊற்ற வேண்டும். புளிக் கரைசலை ஊற்றிய பிறகு ஏற்கனவே வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து கட்டிப்பட்டு வரும் பொழுது இறக்கிவிடலாம். இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

எளிமையா செய்யலாம் செட்டிநாட்டு ஸ்டைலில் அருமையான பரங்கிக்காய் புளிக்கறி!

அவ்வளவுதான் காரைக்குடி ஸ்டைலில் சுண்டைக்காய் பச்சடி தயார்.

Exit mobile version