பாஸ்தா குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு உணவு பொருளாகும். இந்த பாஸ்தாவை மசாலா சேர்த்தும் அல்லது சாஸ் சேர்த்தும் பலவிதமாக செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ருசித்து சாப்பிடக்கூடிய இந்த பாஸ்தாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
வாவ் குழந்தைகளுக்கு சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…!
பாஸ்தா செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவு பாஸ்தாவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வேகவைத்து கொள்ள வேண்டும். ஒரு பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்தா வெந்ததும் இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து அதனை நன்கு வதக்கிக் கொள்ளவும். நன்கு பழுத்த மூன்று தக்காளிகளை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். இப்பொழுது கேரட், குடைமிளகாய் என உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், மூன்று ஸ்பூன் தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது நாம் வேகவைத்து வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்து அனைத்தையும் நன்றாக கிளறி விடவும்.
ஹோட்டல் சுவையிலேயே பன்னீர் பட்டர் மசாலா…! இப்படி செய்து பாருங்கள்!
அனைத்தையும் நன்றாக கிளறிய பிறகு இதனுடன் சிறிதளவு மிளகுத்தூளை தூவி விடவும். இப்பொழுது கொத்தமல்லி தழையையும் இதனுடன் தூவி விட வேண்டும். விருப்பப்பட்டால் சிறிதளவு சீசையும் இதன் மேல் துருவி சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான பாஸ்தா தயார்…!