கொழுப்பை கரைக்கும் கொள்ளு வைத்து அருமையான கொள்ளு துவையல்!

கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்ற முதுமொழி நாம் பலமுறை கேட்டிருப்போம். கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை கூடாமல் வைத்திருக்க உதவும். எனவே தான் அதிக வேலை செய்யும் குதிரைக்கு இந்த கொள்ளினை உணவாகக் கொடுப்பார்கள். கொள்ளு கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்குமா என்றால் இல்லை. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.

கத்தரிக்காய் இருந்தால் ஒரு முறை இந்த கோஸ் மல்லி செய்து பாருங்கள்… இடியாப்பம், தோசைக்கு சூப்பரான கோஸ் மல்லி!!

கொள்ளில் வைட்டமின்கள், புரதச்சத்து இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு கொள்ளு நல்ல மருந்தாகும். புரதச்சத்து நிறைந்து இருப்பதால் உடலில் உள்ள திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இந்தக் கொள்ளினை வைத்து அருமையான கொள்ளு துவையல் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

அரை கப் கொள்ளை எடுத்து சுத்தம் செய்து வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஆறு வர மிளகாய், இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். இவை வறுபட்டதும் பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்க்க வேண்டும். பின் ஆறு பல் பூண்டினை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு புளி சேர்க்கவும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து இவை அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும்.

அனைத்தும் வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும். ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு வறுத்த கொள்ளையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இந்தத் துவையல் சற்று கொரகொரப்பான தன்மையில் தான் இருக்கும். இதனை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்க வேண்டும்.

வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்…! குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்!

சூடான சாதத்தில் இந்த கொள்ளு துவையல் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கும் நன்மை தரும்.

அவ்வளவுதான் சத்தான கொள்ளு துவையல் தயார்!

Exit mobile version