கத்தரிக்காய் இருந்தால் ஒரு முறை இந்த கோஸ் மல்லி செய்து பாருங்கள்… இடியாப்பம், தோசைக்கு சூப்பரான கோஸ் மல்லி!!

கோஸ் மல்லி என்பது இட்டலி, தோசை, இடியாப்பம் என அனைத்திற்கும் சூப்பரான ஒரு காம்பினேஷன் ஆகும். இது வழக்கமான சட்டினி, சாம்பார் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். இது கத்தரிக்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி. இடியாப்பம், இட்டலி, தோசை என டிபன் வகைகள் என்னதான் மிருதுவாக, பக்குவமாக செய்தாலும் அதன் உடன் வைக்கும் சட்னி, சாம்பார் போன்ற சைடு டிஷ்கள் தான் நாம் எத்தனை தோசை, இட்டிலி சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இந்த கத்தரிக்காய் கோஸ் மல்லி நீங்கள் ஒரு முறை செய்து சாப்பிட்டு பார்த்தால் எத்தனை தோசைகள் சாப்பிடுகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது.

இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்ற ருசியான கறிவேப்பிலை சட்னி…!

கோஸ் மல்லி சட்டினி போன்ற செய்வதற்கு எளிமையான ஒரு ரெசிபி தான். இந்த கோஸ் மல்லி செய்ய அதிக பொருட்கள் தேவையில்லை இதை மிக எளிமையாக செய்யலாம்.

இந்த கோஸ் மல்லி செய்ய முதலில் நான்கு பெரிய கத்தரிக்காய் எடுத்து அதனை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு வேக விட வேண்டும். கத்தரிக்காய் வெந்ததும் அதனை சிறிது நேரம் ஆறவிட்டு பின் கத்தரிக்காயில் உள்ள தோல்களை உரித்து கத்தரிக்காயை பிசைந்து வைக்க வேண்டும்.

150 கிராம் சின்ன வெங்காயம், ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு தக்காளி ஆகிய அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு வர மிளகாய், மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

சாம்பார் சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்… செய்த சாதம் கொஞ்சம் கூட மிஞ்சாது!

தாளித்த பின் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். இவை இரண்டும் வதங்கியதும் ஏற்கனவே வேக வைத்து தோல் உரித்து பிசைந்த கத்தரிக்காயுடன் சிறிதளவு உப்பு மற்றும் புளியை சேர்த்து கரைத்து வதக்கிய தக்காளி வெங்காயத்துடன் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

அவ்வளவுதான் டிபன் வகைகளுக்கு சூப்பரான கத்தரிக்காய் கோஸ் மல்லி தயார்!

Exit mobile version