நாக்கில் வைத்த உடன் சுவையில் நாட்டியம் ஆடும்… ஊட்டச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை அல்வா!

முருங்கைக்கீரை உடலுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. வாரத்தில் குறைந்தது 4 முதல் 5 நாட்கள் முருங்கைக்கீரையை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முருங்கை கீரை வைத்து பருப்பு சாதம், முருங்கைக்கீரை பொரியல், முட்டை சேர்த்து முருங்கைக்கீரை, முருங்கை கீரை பொடி என பலவிதமான உணவு முறைகள் இருந்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் விதத்தில் முருங்கைக்கீரை வைத்து அருமையான அல்வா செய்யலாம் வாங்க…

இந்த அல்வா செய்வதற்கு முதலில் ஒரு கப் முருங்கைக் கீரையை கழுவி சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஐந்து முதல் பத்து முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பின் நம் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை இதனுடன் சேர்த்து வறுக்க வேண்டும்.

முருங்கை கீரை நெய்யுடன் சேர்ந்து நன்கு பொரிந்து வர வேண்டும். அதன் பின் அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த கலவை சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் அரை கப் தேங்காய் துருவல், இரண்டு ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை அடைக்கும் பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அதே கடாயில் மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

எப்பொழுதும் ஒரே மாதிரியான பால் பாயாசம், பருப்பு பாயாசம் சாப்பிட்டு சலித்து விட்டதா? வாங்க கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் ட்ரை பண்ணலாம்!

நன்கு கொதித்து வரும் நேரத்தில் ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லம் இல்லாத பட்சத்தில் கருப்பட்டி, நாட்டு சக்கரை சேர்த்து கூட செய்து கொள்ளலாம்.

வெல்லம் சேர்த்து கைவிடாமல் பத்து முதல் 15 நிமிடங்கள் கிளற வேண்டும். முருங்கைக்கீரை நன்கு நீர் வற்றி அல்வா பதத்திற்கு திரண்டு வரும் பொழுது கூடுதலாக அரை தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கெட்டியான அல்வாபதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.இப்பொழுது சுவையான மற்றும் சத்து நிறைந்த முருங்கைக்கீரை அல்வா தயார்.

Exit mobile version