விசேஷ நாட்களில் பரிமாறப்படும் உணவு வகைகளில் இனிப்பிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அதிலும் பாயாசம் இல்லாமல் எந்த பந்தியும் இருக்காது விசேஷ நாளும் இருக்காது. எப்போதும் பால் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் எனஒரே மாதிரியான பாயாசத்தை அடிக்கடி செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் ஒருமுறை செய்து பாருங்கள். ஊரே மணக்கும் பலாப்பழத்தில் பாயாசம் செய்யும் பொழுது சுவை அருமையாகவும் சாப்பிட தித்திப்பாகவும் இருக்கும். இந்த பலாப்பழ பாயாசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.
முதலில் பத்து முதல் 15 பலாப்பழங்களை அதன் விதைகள் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பலாப்பழத்தையும் நான்காக கீரி ஒரு குக்கரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்கு வெந்திருக்கும் பலாப்பழங்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த பலாப்பழ விழுது ஒரு கப்பிற்கு முக்கால் கப் வெல்லம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்படி முக்கால் கப் வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
வெல்லம் நன்கு கரைந்து கொதித்து வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பலாப்பழ விழுதுகளை அதனுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தண்ணீர் வற்றி கெட்டியாக வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும். பலாப்பழ விழுது வெல்லத்துடன் சேர்ந்து நன்கு கொதித்து கெட்டியாக இறுகி வரவேண்டும்.
இறுதியாக கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்பொழுது மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் போதுமானது.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக மீதம் இருக்கும் அதை நெய்யில் 10 முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கிடைக்கும் ஸ்பெஷல் கிழங்கு பொட்டலம்! ரெசிபி இதோ….
இப்பொழுது அதே கடாயில் நாம் தேங்காய் பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பால் எடுக்கும் பொழுது இரண்டாவது முறையாக தண்ணியாக இருக்கும் தேங்காய் பாலை நாம் இதில் பயன்படுத்த வேண்டும். கடாயில் மூன்றாவது முறை எடுத்த தேங்காய் பால் ஊற்றி அதில் நாம் வேக வைத்திருக்கும் பலாப்பழ விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை நன்கு கலந்து கொடுத்து கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் நன்கு கொதித்த பின் நாம் முதல் முறை எடுத்து வைத்திருக்கும் கெட்டியான தேங்காய் பாலை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கிளற வேண்டும்.
கெட்டி தேங்காபால் சேர்த்த பிறகு பாயாசம் கொதிக்க கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்த உடனே நாம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் முந்திரி பருப்புகளை பாயாசத்தில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான பலாப்பழ பாயாசம் தயார்.