இருமல், சளி தொல்லையா… ஐந்தே நிமிடத்தில் எளிமையான நிவாரணம் இதோ… புதினா ரசம் செய்வதற்கான ரெசிபி!

திடீர் வானிலை மாற்றத்தின் காரணமாக சில இடங்களில் மழை, வெயில் என மாறி மாறி இருந்து வருகிறது. இதனால் பலருக்கு தடுமல், சளி, காய்ச்சல், உடம்பு வலி என பல உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அருமையான ரசம் செய்து சாப்பிடலாம் வாங்க… புதினா ரசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, இரண்டு பச்சை மிளகாய், 5 பல் வெள்ளை பூண்டு, , ஒரு கைப்பிடி அளவு புதினா, சிறிய எலுமிச்சை பழம் ஒன்று சேர்த்து பரபரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக அரை தேக்கரண்டி மஞ்சள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளையும் சேர்த்து மிதமான தீயில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நிமிடம் வரை இந்த கலவையை மிதமான தீயில் கடாயில் வதக்க வேண்டும். இந்த நேரத்தில் ரஸத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கலவையை நன்கு கலந்து கொடுத்து உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் இந்த ரசத்தை ஐந்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

மூன்று வெங்காயம் போதும்… சுவையான ஆனியன் மஞ்சூரியன் தயார்!

ரசம் நன்கு கொதித்து வந்ததும் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய புதினா மற்றும் மல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான புதினா ரசம் தயார். இந்த ரசம் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது அஜீரணம், சளித்தொல்லை போன்றவற்றிலிருந்து எளிதில் நிவாரணம் பெற முடியும். மேலும் இதை மாலை வேலைகளில் சூப்பாகவும் செய்து குடிக்கலாம்.

Exit mobile version