வீட்டில் காய்கறிகள் பெரிதும் இல்லாத நேரங்களில் சுவையான மஞ்சூரியன் சாப்பிட வேண்டுமா? இரண்டு வெங்காயம் வைத்து அசத்தமான ஹோட்டல் சுவையில் மஞ்சூரியன் வீட்டிலேயே தயார் செய்யலாம். அதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த ஆனியன் மஞ்சூரியன் செய்வதற்கு இரண்டு வெங்காயம் போதுமானது. இதில் ஒரு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வெங்காயத்தை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின் அந்த வெங்காயத்தை ஒரு சேர கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும். வெங்காயம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் உதிர்த்து விட வேண்டும்.
அடுத்ததாக இந்த கலவையில் மூன்று தேக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளலாம். இதில் மைதா மாவு சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் கான்பிளார் மாவு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காரத்திற்கு ஏற்ப முக்கால் தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக மாவு வை தயார் செய்ய வேண்டும். மாவு தயாராக மாறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
இந்த உருண்டைகளை நன்கு எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். பொன்னிறமாக வரும்வரை இன்னும் பின்னும் பொறித்தெடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 5 பல் வெள்ளை பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளைப்பூண்டுடன் சேர்த்து பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி டொமேட்டோ சாஸ், ஒரு தேக்கரண்டி சில்லி சாஸ், ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து மிதமான தீயில் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக நாம் புரிந்து வைத்திருக்கும் வெங்காயம் மஞ்சூரியனை இதில் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இப்பொழுது சுவையான ஆனியன் மஞ்சூரியன் தயார். குழந்தைகளுக்கு பிடித்த இந்த மஞ்சூரியனை மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுத்து மகிழ்விக்கலாம்.