வேர்க்கடலை சுவை நிறைந்த உணவு பொருள் மட்டுமல்ல உடலுக்கு தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருளும் கூட. ஏழைகளின் பாதம் என்று அழைக்கப்படும் இந்த வேர்க்கடலை வைத்து நாம் பல ரெசிபிகளை செய்ய முடியும். வேர்க்கடலையை வறுத்தோ அவித்தோ சாப்பிடலாம் அல்லது வேர்க்கடலை சட்னி, குழம்பு என பல ரெசிபிக்கள் செய்யலாம். இன்று வித்தியாசமாக வேர்க்கடலையை வைத்து எப்படி அசத்தலான வேர்கடலை சாதம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். சுவை நிறைந்த இந்த வேர்க்கடலை சாதத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கொடுத்து விடலாம். இதன் சுவை நிச்சயம் அவர்களுக்கு பிடிக்கும். வீட்டிற்கு வரும் பொழுது அவர்களுடைய லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும்.
அனைவருக்கும் பிடித்தமான வேர்க்கடலை குழம்பு! இதுபோல செய்து பாருங்கள்…!
வேர்க்கடலை சாதம் செய்வதற்கு முதலில் ஒரு பேனில் அரை கப் அளவு வேர்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேர்க்கடலையை கருக்கி விடாமல் சிவந்து வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும். இப்பொழுது அதே பேனில் ஆறு காய்ந்த மிளகாய், ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் எள்ளு, 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அதையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். வறுத்த கடலையை அதன் தோலை நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுலபமா செய்யலாம் வேர்க்கடலை சட்னி! எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள் என்று கணக்கே தெரியாது…
இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். இதில் கால் கப் அளவிற்கு வேர்க்கடலையையும் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவற்றை கலந்த பிறகு இரண்டு கப் அளவிற்கு வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மேல் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை தேவையான அளவு தூவி விடவும். இந்த நிலையில் இந்த சாதத்திற்கு உப்பினை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து இதனை நன்றாக கிளறி விட வேண்டும் அவ்வளவுதான் அட்டகாசமான வேர்க்கடலை சாதம் தயாராகி விட்டது.