வார இறுதி நாட்களில் மட்டன் சிக்கன் என்று இறைச்சிகளை வாங்கி சமைத்து குடும்பத்தாரோடு சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் மட்டன் வாங்கும் பொழுது எப்பொழுதும் சாப்பிடுவதைப் போல் இறைச்சியை மட்டும் வாங்கி சமைத்து சாப்பிடாமல் ஆற்றின் மற்ற பாகங்களையும் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக கூறுகிறார்கள். அப்படி பல நன்மைகள் நிறைந்த சமைக்கக்கூடிய ஆட்டின் ஒரு உடல் உறுப்பு தான் குடல். ஆட்டின் குடல் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்தது. இது செரிமான மண்டலத்தை ஒழுங்கு படுத்துகிறது.
குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து குடலில் ஏற்படக்கூடிய புற்று நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உடையது. அல்சர் பிரச்சனை உடையவர்களுக்கு இது நல்ல நிவாரணியாகவும் விளங்குகிறது. இந்த ஆட்டின் குரல் கறியை வைத்து கிராமத்து பாணியில் எப்படி குடல் கறி குழம்பு வைக்கலாம் என்பதை பார்ப்போம்.
குடலை நன்கு சுத்தம் செய்து வெந்நீரில் கழுவி அலசி எடுத்துக் கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டு தக்காளி மற்றும் ஒரு முருங்கைக்காயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 100 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பாதி வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் மீதி வெங்காயத்தை நறுக்காமல் முழுதாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி ஒரு ஸ்பூன் மிளகு போட்டு வறுத்துக் கொள்ளவும் பின்பு 4 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் கசகசா, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கருக்கி விடாமல் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி நறுக்கி வைத்த தக்காளியை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். முழுதாக வைத்த சின்ன வெங்காயத்தையும் சிறிதளவு எண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அதே கடாயில் சுத்தம் செய்து வைத்த குடல் கறியை நன்றாக ஒன்றோடு ஒன்று ஒட்டாத அளவுக்கு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி வேக வைக்க வேண்டும்.
ஒரு கப் தேங்காய் துருவலை நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் ஏற்கனவே வதக்கி வைத்த மிளகு பூண்டு, இஞ்சி, சீரகம், கசகசா, சோம்பு ஆகியவற்றோடு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக வதக்கிய சின்ன வெங்காயத்தையும் இந்த விழுதோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஏற்கனவே வேக வைத்திருக்கும் குடல் கறியில் நறுக்கிய முருங்கைக்காய் வதக்கிய தக்காளி சேர்த்து கிளறி விடவும் பின்பு அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து கிளறவும்.
இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். முருங்கைக்காய் நன்கு வெந்தவுடன் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு கல்பாசி, 2 பட்டை, சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வதக்கி கொள்ளவும்.
மணமணக்கும் நாட்டுக்கோழி ரசம்… எல்லா உடல் நல பிரச்சனையையும் விரட்டிடும் பாருங்க!
வதக்கியவற்றை குழம்புடன் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிவரும் பொழுது அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் கிராமத்து மணம் வீசும் அருமையான குடல் கறி குழம்பு தயார்!