வாய்ப்புண், குடல் புண்ணை குணப்படுத்தும் பச்சைப்பயிறு பால்கறி!

வெயிலின் உஷ்ணம் அதிகரிக்க அதிகரிக்க சிலருக்கு வாய்ப்புண், குடல்புண் ஏற்படுவது வழக்கம். அந்த நேரங்களில் உடலின் வெப்பத்தை குறைக்கும் வகையான உணவுகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை பயிறு பால்கறி மிதமான காரத்துடன் உடலின் உஷ்ணத்தை குறைத்து எளிதில் அஜீரணம் ஆகி குடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. இந்த பச்சை பயிறு பால்கறி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

இந்த பால்கறி செய்வதற்கு முதலில் ஒரு கப் பச்சை பயிரை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அந்த நேரத்தில் கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு பெரிய தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டாக கீறிய பச்சை மிளகாய் ஒன்று, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக கருகருவென நீண்டு வளர வேண்டுமா? வாங்க கருவேப்பிலை தொக்கு தயார் பண்ணலாம்!

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்றவுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது பாசிப்பயிறு நன்கு வந்ததும் அதை இந்த கடாயில் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பத்து நிமிடங்கள் கழித்து பாசிப்பருப்பை லேசாக மசித்து கொடுத்தால் போதுமானது. இறுதியாக இரண்டு தேக்கரண்டி காய்ச்சிய பசும்பால் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது வாசனைக்காக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி இறக்கினால் பச்சை பயிறு பால்கறி தயார். பசும்பால் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் தேங்காய் பால் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பால் சேர்த்த உடனே அடுப்பை அணைத்து விட வேண்டும்.

Exit mobile version