தலைமுடி அடர்த்தியாக கருகருவென நீண்டு வளர வேண்டுமா? வாங்க கருவேப்பிலை தொக்கு தயார் பண்ணலாம்!

தலைமுடி கருகருவென அடர்த்தியாக நீட்டமாக வளர்வது யாருக்குத்தான் பிடிக்காது. பெண், ஆண் என இரு பாலருக்கும் முடியும் இது அதிக கவனம் மற்றும் கரை இருந்து வருகிறது. முடி அடர்த்தி குறைவது, முடி உதிர்தல், வெள்ளை முடி வருதல் என முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக அமைவது கருவேப்பிலை. அந்த கருவேப்பிலை வைத்து அருமையான தொக்கு ரெசிபி பார்க்கலாம் வாங்க.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 15 முதல் 20 பல் வெள்ளை பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெள்ளைப்பூண்டு வதங்கியதும் ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு புளி, காலத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் பத்து, இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் .

தொடர்ந்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை கருவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை நன்கு வதங்கியதும் வதக்கிய பொருட்களை பத்து நிமிடங்கள் ஓரமாக ஆரவைத்து விடவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய அனைத்து பொருட்கள் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
கடுகு நன்கு பொறிந்ததும் 5 பல் வெள்ளைப் பூண்டுவை நன்கு இடித்து சேர்த்துக் கொள்ளவும். வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக மாறியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் கலவை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

மிதமான தீயில் இந்த கலவையை 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். கருவேப்பிலை தொக்கு நன்கு சுண்டி கடாயின் ஓரங்களில் என்னை பிரிந்து வந்தால் தொக்கு தயாராக மாறிவிட்டது. இப்பொழுது அடுப்பை அணைத்து சிறிய துண்டு வெள்ளம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! ஹெல்த்தியான முருங்கைக்கீரை பிரைட் ரைஸ்….

சுவையான மற்றும் சத்து நிறைந்த இந்த கருவேப்பிலை தொக்கு உடலுக்கு பல சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி முடியும் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. சூடான சாதத்தில் இந்த தொக்கு விரைவில் சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version