பள்ளி சொல்லும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு ஸ்பெஷலான லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த மதிய உணவு சத்தானதாகவும், சுவையானதாகவும் இருந்தால் மட்டுமே டிபன் பாக்ஸ் காலியாக வீட்டிற்கு வரும். இந்த நிலையில் கீரை வைத்து குழந்தைகளுக்குப் பிடித்தமான பிரைடு ரைஸ் ஒன்று செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகள் சுவையில் மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்டு அடம் பிடிக்கும் வகையில் அமையும். கீரை பிரைட் ரைஸ் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..
இந்தக் கீரை பிரைட் ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், மூன்று காய்ந்த வத்தல், 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.
கீரையை முறுமுறுவென வரும் அளவிற்கு நன்கு காய்ந்த இலை போல வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த இரண்டு பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜார்ஜ் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ளவும்.
அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடலை பருப்பு உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறியதும் வடித்த சாதம், அரைத்து வைத்திருக்கும் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் பெங்காலி ஸ்டைல் கடலைப்பருப்பு சப்ஜி!
இப்பொழுது சுவையான முருங்கைக்காய் ஃப்ரைட் ரைஸ் தயார். இந்த சாதத்தை உடனே சாப்பிடாமல் ஒரு பத்து முதல் 15 நிமிடங்கள் அப்படியே ஆற வைத்துவிட்டு அதன் பின் சாப்பிடும் பொழுது சுவை மேலும் அருமையாக இருக்கும்.