பொதுவாக நம் வீடுகளில் சாதம் மீந்து போகலாம். அதை வைத்து எலுமிச்சை பழ சாதம், புளியோதரை சாதம், அல்லது முட்டை சாதம் செய்வது வழக்கம். சில நேரங்களில் இது போன்ற சாதங்கள் செய்ய முடியாத சமயங்களில் பழைய சாதமாக தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிடுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த நிலைமை இனி இல்லை. சாதம் வீட்டில் மீதமாகிவிட்டால் அதை வைத்து அருமையான பல பல வெரைட்டி டிஸ்க்கள் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க…
ஒரு கப் மிதமான சாதத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் மூன்று கப் பால் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
பால் நன்கு கெட்டியாக மாறியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் சாதம் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவை தயிர் சாதம் போல கெட்டியாக வரவேண்டும். அந்த நேரத்தில் நன்கு பழுத்த ஒரு மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்த மாம்பழ பல்பை நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இனிப்பிற்காக அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக நிறத்திற்காக ஒரு கைப்பிடி அளவு குங்குமப்பூ சேர்த்து கிளற வேண்டும். இதில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு பாதாம் சேர்த்து நன்கு கிளறி கலவையை சமப்படுத்தி அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது சுவையான கீர் தயார். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மீதமான சாதம் வைத்து பூரி செய்யலாம் வாங்க. இதற்கு ஒரு கப் மீதமான சாதத்தை நன்கு மையாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த சாதத்தை ஒரு பௌலில் மாற்றி கொள்ளலாம். இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு சிட்டிகை ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பூரி மாவு பதத்திற்கு வர வேண்டும் என்பதால் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது வழக்கம் போல் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை குறித்து எடுத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது சூடான பூரி தயார். இதற்கு நம் முன்னதாக தயார் செய்து வைத்த குளிர்ந்த கீர் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். வீட்டில் மீதமான சாதம் வைத்து இவ்வளவு அருமையான மற்றும் புதுமையான டிஷ் செய்து சிறப்பாக அசத்தலாம் வாங்க.