இட்லிக்கு தாராளமாக வைத்து சாப்பிடக்கூடிய கிராமத்து ஸ்டைல் தக்காளி சாம்பார்!

நம் வீடுகளில் சாம்பார் ஒன்று வைத்தால் போதும் காலை வேலை இட்லியில் தொடங்கி மதிய வேலை சாப்பாட்டிற்கு மற்றும் இரவு தோசைக்கு என மூன்று வேளையும் வைத்து அருமையாக சாப்பிட்டுவிடலாம். அதிலும் காலை வேலை சூடாக இட்லி சாப்பிடும் பொழுது சாம்பார் சற்று கூடுதலாக தேவைப்படும். சூடான இட்லியில் சாம்பார் மணக்க மணக்க சற்று அதிகமாக இட்லியை மிதக்க வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அளாதீ தான். கெட்டியாக இல்லாமல் சற்று தண்ணியாக தக்காளியின் புளிப்பு சுவையுடன் அருமையாக இருக்கும் தக்காளி சாம்பார் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் சேர்த்து சாம்பார் செய்யும் பொழுது அதன் சுவை சற்று சிறப்பாக இருக்கும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த நான்கு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கி தோல் பிரிந்து வரவேண்டும்.

அந்த நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கப் பருப்பிற்கு மூன்று கப் அளவு தண்ணீர் என்பது கணக்கு.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக மஸ்ரூம் மிளகு சாதம்!

அதன்படி மூன்று கப் தண்ணீர் சேர்த்து அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக கால் மணி நேரம் ஊற வைத்திருக்கும் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து கைப்பிடி அளவு கொத்தமல்லி தலை தூவி கிளறி குக்கரை மூடி விட வேண்டும்.

குறைந்தது மூன்று விசில்கள் வரும் வரை பருப்பை நன்கு வேக வைத்து இறக்கினால் சுவையான தக்காளி சாம்பார் தயார். இந்த சாம்பாரை தாராளமாக இட்லிக்கு வைத்து விரவி சாப்பிடும் போது சுவை அப்படி இருக்கும்.

Exit mobile version