பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக மஸ்ரூம் மிளகு சாதம்!

மஸ்ரூம் வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக பிரியாணி, கிரேவி, மற்றும் 65 என செய்யாமல் சற்று வித்தியாசமாக மஷ்ரூம் உடன் மிளகு அதிகமாக சேர்த்து சாதம் ஒன்று செய்து பாருங்கள். இந்த சாதம் செய்வதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது. காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த மஸ்ரூம் மிளகு சாதம் கொடுத்து விடலாம். எளிமையான முறையில் மற்றும் மிளகு சாதம் செய்வதற்கான ரெசிபி இதோ…

அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் காரத்திற்கு ஏற்ப இரண்டு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி சிக்கன் மசாலா, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கழித்து நாம் நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சம்பா ரவா கிச்சடி!

கடாயில் தண்ணீர் சேர்க்காமல் காளானை வதக்க வேண்டும். மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது நாம் வடித்து ஆற வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து கிளறி கொள்ளலாம்.

இறுதியாக உப்பு ஒரு முறை சரிபார்த்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கிளறினால் சுவையான காளான் மிளகு சாதம் தயார். இந்த சாதம் சாப்பிடும் பொழுது தனியாக சைடிஷ் ஏதும் தேவைப்படாது. மேலும் அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version