சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சம்பா ரவா கிச்சடி!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் பல கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியம் தரக்கூடிய உணவு முறைகளை தொடர்ந்து தன் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயில் இருந்து எளிதில் விடுபட முடியும். இந்த வகையில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது காலை மாலை என சம்பா ரவை வைத்து கிச்சடி செய்து சாப்பிடும் பொழுது உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தை பெற முடிகிறது. இந்த சம்பா ரவா கிச்சடி செய்வதற்கான ரெசிபி இதோ..

சம்பா ரவா கிச்சடி செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை ரவையை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

குறைந்தது மூன்று நிமிடங்கள் வரை ரவையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளலாம். வறுத்த இந்த ரவையை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்து அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் மூன்று கிராம்பு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஏலக்காய் 2, பட்டை இரண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காரத்திற்கு ஏற்ப மூன்று பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

ரவா கிச்சடி செய்வதற்கு தேவையான காய்கறிகளை இதில் கலந்து கொள்ளலாம். உதாரணமாக கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், தக்காளி, குடைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து காய்கறிகளை மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து ஒரு கப் ரவைக்கு மூன்று கப் அளவு வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் ரவையை அதில் சேர்த்துக் கொள்ளலாம். கட்டிகள் விழாக வண்ணம் ரவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

உணவே மருந்து எனும் வாக்கியத்திற்கு ஏற்றார் போல் நம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் நமக்கே தெரியாமல் மறைந்திருக்கும் அற்புதம் மருத்துவ குணங்கள் இதோ…

அடுத்ததாக மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வரை ரவையை வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சம்பா ரவை கிச்சடி தயார்.

இதை வெறுமையாக சாப்பிடும் பொழுது சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி உடன் சேர்த்து சாப்பிடலாம்.

Exit mobile version