உணவே மருந்து எனும் வாக்கியத்திற்கு ஏற்றார் போல் நம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் நமக்கே தெரியாமல் மறைந்திருக்கும் அற்புதம் மருத்துவ குணங்கள் இதோ…

பழைய காலங்களில் மருத்துவ வசதிகள் பெரிதாக இல்லாத நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்து தயாரித்து கொடுத்து வைத்தியம் பார்ப்பது பாரம்பரியமாக இருந்துள்ளது. அந்த வகையில் நமக்கே தெரியாமல் நாம் தினமும் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பலவிதமான உணவுகளில் ஒளிந்திருக்கும் பல நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

ஆஸ்துமா, மார்புச்சளி, சைனஸ் போன்ற சுவாச கோளாறு பிரச்சனைகள் இருப்பவர்கள் முருங்கைக்கீரை இலையை ரசம் அல்லது சூப் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து எளிமையாக விடுபட முடியும்.

காலை உணவாக ராகி அடை சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து, இரத்த சோகை நீங்கி, பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் ராகி தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

மணத்தக்காளி கீரையை சாப்பிடும் பொழுது செரிமானம், வயிறு, குடல் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தி வாய்ப்புண், துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், வயிறு கடுப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

எலுமிச்சை பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் தொழில் ஏற்படும் கரும்புள்ளி சுருக்கம் இவற்றை குறைத்து முகம் பொலிவாக இருக்கும். மேலும் இளமையாகவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதன் மூலமாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடியும். மேலும் ரத்த உற்பத்தியை அதிகரித்து புதிய ரத்தம் உருவாகவும் உதவுகிறது.

பாகற்காய் அல்லது அதனுடைய இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது .

சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து நன்கு சூடாக்கி வலியுள்ள கை, கால், மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் மூட்டு வலி முற்றிலும் குணமாகும்.

பீர்க்கங்காய் தோலை பச்சையாக அரைத்து தலையில் பூசி பத்து நிமிடம் வரை ஊறவைத்து பிறகு குளித்தால் இள நரை சரியாகும்.

Exit mobile version