நம்முடைய அன்றாட சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு உணவுப் பொருள்தான் பூண்டு. பூண்டு உடலுக்கு நன்மையை தந்து உணவுக்கு சுவையையும் அதிகரிக்கிறது. குழம்பு வகைகள், சாத வகைகள், சட்டினிகள், அசைவ உணவுகள், சைவ உணவுகள் என அனைத்திலும் பூண்டு கட்டாயம் இடம் பிடித்து விடும். ஆனால் இந்த பூண்டை தோல் உரிப்பது மிகவும் கடினமான ஒரு வேலையாக தெரியும். பூண்டு உணவின் சுவையை அதிகரித்தாலும் இதன் தோலை உரிப்பதை பலரும் விரும்புவதில்லை. இனி கவலை வேண்டாம் பூண்டின் தோலை எப்படி எளிமையாக உரிக்கலாம் என்பதற்காக உங்களுக்கு சில டிப்ஸ்கள். இதை முயற்சி பண்ணி பாருங்க ஒரு கிண்ணம் பூண்டாக இருந்தாலும் சட்டென்று தோல் உரிச்சிடுவீங்க.
உங்கள் பிரஷர் குக்கர் பழுதாகாமல் நீண்ட நாட்களுக்கு பராமரிக்க அருமையான டிப்ஸ்…!
பூண்டின் மேல் பாகத்தையும் அடிப்பாகத்தையும் நறுக்கிவிட்டு சில நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வையுங்கள். தண்ணீரில் கொஞ்சம் ஊறிய பிறகு இதன் தோல்களை உரித்துப் பார்த்தால் எளிமையாக உரிந்து வரும். உங்கள் நகமும் வலிக்காது.
பூண்டை ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி விடுங்கள். இதனை சில நிமிடங்கள் நன்றாக குலுக்கி பிறகு திறந்து பார்த்தால் பூண்டின் தோல் உரிபட்டு இருப்பதை பார்க்கலாம்.
பூண்டினை ஒரு ட்ரெயில் பரப்பி மைக்ரோவேவ் அவனில் 30 வினாடிகள் வைத்து எடுங்கள். இவ்வாறு வைத்து எடுப்பதன் மூலம் பூண்டின் தோல் எளிதாக உரிக்க வரும்.
மைக்ரோவேவ் அவன் வீட்டில் இல்லை என்றால் ஒரு வாணலியில் பூண்டை சேர்த்து சில வினாடிகள் சூடு காட்டுங்கள். அதன் பிறகு பூண்டின் தோல் எளிமையாக உரிக்கலாம்.
பூண்டின் மேல் ஒரு மத்து கொண்டு தட்டி அதன் பிறகு பூண்டை உரித்தால் எளிமையாக தோலினை நீக்க முடியும்.
பூண்டை கத்தியால் இரண்டாக நறுக்கி அதன் பிறகு தோலை நீக்கினால் எளிமையாக தோல் உரிக்கலாம்.
உங்கள் கேஸ் ஸ்டவ்வை இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பராமரித்து பாருங்கள்.. என்றும் புதிதாய் இருக்கும்!
இந்த வழிமுறைகளில் உங்களுக்கு வசதியான ஒன்றை பின்பற்றி பாருங்கள். எளிமையாக பூண்டை உரித்து உங்கள் சமையலில் அதிக நேரத்தை மிச்சப்படுத்தலாம்.