தென்னிந்திய சமையல் என்றாலே சாம்பார், இட்லி, மெதுவடை என்பதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் தென்னிந்திய சமையலில் தனக்கான மிக முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு உணவு வகை தான் ரசம். இந்த ரசம் சுவையான உணவு மட்டுமல்ல உடலுக்கு நன்மைகளும் தரக்கூடியது. உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் ரசத்திற்கு உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரசம் பயன்படும். இந்த மழைக்காலத்தில் வீட்டில் ரசம் வைத்து சாப்பிட அத்தனை நன்றாக இருக்கும். இந்த ரசத்தை செய்யும் பொழுது நாம் சில டிப்ஸ்களை பாலோ செய்தால் கூடுதல் சுவை நிறைந்ததாக செய்ய முடியும். வாருங்கள் அந்த டிப்ஸ்களை பார்க்கலாம்.
ரசம் வைக்கும் பொழுது ஒரு சிறிய துண்டு வெல்லம் அல்லது ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து செய்தால் ரசம் கூடுதல் சுவை நிறைந்ததாக இருக்கும்.
ரசத்திற்கான பொடியை அப்பொழுதே பிரஷ்ஷாக உரலில் இடித்து செய்யும் பொழுது ரசத்தின் வாசனை நன்றாக இருக்கும்.
ரசத்திற்கு புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் சில நிமிடங்கள் நேரம் ஊற வைத்து செய்ய வேண்டும். ஒருவேளை உங்களிடம் புளி இல்லை என்றால் நீங்கள் அதற்கு பதிலாக எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்.
மிளகு, சீரகம் இடித்த பொடியை முன்னரே சேர்ப்பதை விட இறுதியாக சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டால் ரசம் நன்றாக இருக்கும்.
ரசத்தை நீங்கள் வைத்திருந்து அடுத்த வேலைக்கு பயன்படுத்த நினைத்தால் கொத்தமல்லி தழையை மொத்தமாக தூவி விடாமல். சிறிதளவு ரசத்தை எடுத்து வைத்திருந்து இரவில் சூடு செய்யும் பொழுது கொத்தமல்லி தலையை தூவி சூடு செய்தால் நன்றாக இருக்கும்.
இது அனைவரும் அறிந்த ஒன்றுதான் ரசத்தை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. ஒரு கொதி வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும். ரசம் கொதித்தால் நன்றாக இருக்காது.