அடடே! எச்சில் ஊறச் செய்யும் எலுமிச்சை ஊறுகாய்.. அனைத்து சாதத்திற்கும் இது ஒன்று போதும்!

ஊறுகாய் அனைவருக்கும் பிடித்தமான ஒரு சைட் டிஷ். தயிர் சாதம், ரசம் சாதம், கலவை சாதம் என எது என்றாலும் சிலருக்கு ஊறுகாய் இருந்தே தீர வேண்டும். இந்த ஊறுகாய் செய்வது சற்று சிரமம் போல் தோன்றினாலும் ஒரு முறை செய்து வைத்து விட்டால் பல மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து வகை சாதங்களுக்கும் பொருந்தும் இந்த ஊறுகாயை மிக சுவையாக இப்படி செய்து பாருங்கள்.

கோவில் சுவையில் அட்டகாசமான புளியோதரை.. எவ்வளவு செய்தாலும் கொஞ்சமும் மிஞ்சாது!!!

10 நன்கு பழுத்த எலுமிச்சை பழத்தை நான்காக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பழத்தை எட்டு துண்டுகளாக நறுக்கி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு குலுக்கி மூடி வைத்து விடவும். மூடிய இந்த எலுமிச்சையை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வைக்க வேண்டும். அவ்வபோது இதனை எடுத்து குலுக்கி வைக்க வேண்டும். இதனை ஒரு நாள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

வெயிலில் வைத்து எடுத்த பிறகு இதனை தாளிக்கலாம். இதற்கு இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை நன்கு வறுத்து பிறகு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த எலுமிச்சை பழத்தில் மூன்று ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

ஒரு கடாயில் 100 மில்லி லிட்டர் அளவு நல்லெண்ணெய் காய வைத்து அதில் இரண்டு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் பெருங்காயத்தூள் தாளித்து கொள்ள வேண்டும் இதனுடன் மூன்று ஸ்பூன் அளவு மிளகாய் பொடி சேர்த்து கிளறிவிட்டு எலுமிச்சம் பழத்தை இதில் இப்பொழுது சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக சேர்ந்து வரும்படி கிளறவும். இறுதியாக வெந்தயப் பொடி சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி சற்று நேரம் கழித்து இறக்கி விடலாம் இந்த ஊறுகாய் நன்கு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும். 15 நாட்கள் அப்படியே வைத்து எலுமிச்சை நன்கு ஊறிய பிறகு பயன்படுத்தலாம்.

கட்டுச் சாதத்துடன் சாப்பிட சுவையான தேங்காய் துவையல்!

ஊறுகாய் தயாரிக்க ஆரம்பித்து செய்து முடிக்கும் வரை அதில் கைகள் வைக்கக் கூடாது. அவ்வபோது வெயிலில் வைத்து எடுக்கலாம். அவ்வளவுதான் சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயாராகி விட்டது.