இட்லி தோசைக்கு சுவையான கார சட்னி…! இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!

காலை டிபனுக்கு பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இட்லி அல்லது தோசை இடம் பிடித்து விடும். இந்த இட்லி மற்றும் தோசைக்கு அருமையான ஒரு சைட் டிஷ் தான் காரச் சட்னி. தக்காளி மற்றும் வெங்காயம் இவற்றோடு வர மிளகாய் சேர்த்து வதக்கி அரைக்கும் இந்த காரசாரமான கார சட்னி அனைவருக்குமே பிடிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான். வாருங்கள் அனைவருக்கும் பிடித்தமான இந்த காரச் சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கொத்தமல்லி வைத்து இந்த சட்னி செய்து பாருங்கள்.. பிறகு அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பாங்க!

காரச் சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே இதனுடன் நான்கு பல் பூண்டு சேர்த்து இரண்டையும் நன்கு வதக்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய மூன்று தக்காளிகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது காரத்திற்கு ஏற்ப 7 லிருந்து 9 வர மிளகாய்களை சேர்த்து அவற்றையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு புளி சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி இதனை ஆற விடவும். நன்கு ஆறிய பிறகு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மை போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது தாளிப்பு செய்வதற்கு ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை அனைத்தையும் சேர்க்க வேண்டும் இறுதியாக சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தும் நன்கு பொரிந்த பிறகு இதனை சட்னியில் சேர்க்கவும்.

அவ்வளவுதான் சுவையான காரசாரமான காரச் சட்னி தயார்!