காரசாரமான நல்லாம்பட்டி ஸ்பெஷல் சோயா வறுவல்!

சைவப் பிரியர்களின் கறி விருந்து என்றாலே சோயா தான். சோயா பிடிக்காது நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அசைவத்தின் அதே சுவையில் சைவ பிரியர்கள் சோயாவை வைத்து விதவிதமான ரெசிபி செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் சோயா வைத்து அருமையான காரசாரமான நல்லாம்பட்டி ஸ்பெஷல் சோயா வறுவல் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

முதலில் ஒரு கப் சோயாவை நன்கு கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். நாம் சோயா ஊற வைக்கும் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஊறவைத்து கொண்டால் சோயா சுவையாக இருக்கும்.

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 15 முதல் 20 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் நான்கு முதல் ஐந்து காய்ந்த மிளகாய், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக மூன்று சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளைப் பூண்டு இவற்றை நன்கு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இஞ்சி பூண்டு விழுதுவை கடாயில் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் சோயாவில் இருந்து தண்ணீரை பிரித்து எடுத்து வெறும் சோயா மட்டும் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் எண்ணெயுடன் சேர்த்து சோயாவை நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

பாட்டி கை பக்குவத்தில் அருமையான மாலை நேர பலகாரம்! காரசாரமான தட்டை ரெசிபி இதோ!

அடுத்ததாக பொடியாக நறுக்கிய அரை கப் தேங்காய் துண்டுகளை கடாயில் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அடுத்து ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் எண்ணெயுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும். சோயாவில் காரம் சேர வேண்டும் என்பதற்காக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடத்தில் தண்ணீர் வற்றி சோயாவில் உப்பு, காரம் நன்கு பிடித்து விடும். இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான சோயா வறுவல் தயார்.

Exit mobile version