சமைக்கும் உணவை அமிர்தமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் மாற்ற சில சமையல் கலை டிப்ஸ்!

சில உணவு முறைகளை அனைவரும் சமைப்பது போல சமைத்தாலும் ருசி அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. மேலும் எப்போதும் போல ஒரே மாதிரியாக குழம்பு வைத்தாலும் சில நேரங்களில் சலித்து விடுகிறது. இதற்கு ஒரே தீர்வு சமையல் கலை டிப்ஸ்தான். நம் வீட்டிற்காக உணவு சமைக்கும் பொழுது சில தந்திரமான டிப்ஸ்களை பயன்படுத்தி உணவின் சுவையை பல மடங்கு அதிகரிக்க முடியும். சமையல் கலை நிபுணர்களின் நுணுக்கமான சமையல் டிப்ஸ்கள் இதோ….

நம் வீட்டில் புளியோதரை செய்யும் பொழுது புளியோதரை தொக்கு உடன் சாதம் சேர்த்து கிளறிய கடைசி நேரத்தில் அரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் கோவில் சுவையைப் போல் புளியோதரை அருமையாக இருக்கும்.

புளித்த கீரையை வைத்து சட்னி செய்யும் பொழுது அதற்காக வழக்கும் நேரத்தில் இரண்டு கத்திரிக்காயை சேர்த்து வதக்கி அரைத்து சட்னி செய்தால் உண்மையாக இருக்கும்.

தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை சேர்த்து அரைத்தால் சட்னி வாசனையாக இருக்கும்.

இட்லி மற்றும் தோசைக்கு மாவு ஊற வைக்கும் பொழுது நான்கு டம்ளர் இட்லி அரிசிக்கு அரை டம்ளர் ஜவ்வரிசி என்ற கணக்கில் சேர்த்து ஊறவைத்து மாவு அரைத்தால் இட்லி மாவு பஞ்சு மாதிரியாக இருக்கும்.


வீட்டில் சப்பாத்தி மற்றும் பூரிக்கு வெஜிடபிள் குருமா செய்யும் பொழுது அதில் காரம் சற்று அதிகமாக சேர்த்துவிட்டால் ஒரு தேக்கரண்டி வெண்ணை சேர்த்து கிளறி இறக்கினால் , காரம் பாதியாக குறைந்து விடும்.

பிரியாணிக்கு சைடிஷ் ஆக செய்யும் வெங்காய பச்சடியில் தயிர் மற்றும் வெங்காயம் வைத்து எப்பொழுதும் போல செய்யாமல் தயிருடன் அரைக்கப் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

குளிர்காலங்களில் நம் பொறித்து வைத்திருக்கும் அப்பளம் சில நேரங்களில் நமத்து விடும். அந்த சமயங்களில் நாம் பொறித்து வைத்திருக்கும் அப்பளத்தை இரண்டு துண்டாக பிரித்து மீண்டும் எண்ணெயில் ஒரு முறை பொரித்து எடுத்தால் முறுமுறு அப்பளம் கிடைக்கும்.

முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு வைத்திருக்கும் பாத்திரங்களில் எறும்பு செல்லாமல் இருக்க ஒரு சிறிய துண்டு கற்பூரத்தை பேப்பரில் பொதிந்து அந்த பாத்திரத்தில் சேர்த்து மூடி வைத்தால் எறும்பு தொல்லை இருக்காது.

கருப்பட்டி, அச்சு வெல்லம் வைத்திருக்கும் பாத்திரத்தில் எறும்பு தொல்லை இருந்தால் ஒரு நான்கு ஐந்து ஏலக்காயை பாத்திரத்துடன் சேர்த்து மூடி வைத்தால் எறும்பு தொல்லை வராது.

கத்திரிக்காய் பிடிக்காது என ஒதுக்குபவர்களுக்கு ஒருமுறை இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கத்திரிக்காய் சாதம் செய்து கொடுத்து பாருங்கள்!

ஆப்பத்திற்கு மாவு தயாரிக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை தண்ணீருடன் கரைத்து அந்த கலவையை சேர்த்து அரைத்து மாவு தயார் செய்யும் பொழுது ஆப்பம் மேலும் விருதுவாக இருக்கும்.
வீட்டில் சமையல் புளி வைத்திருக்கும் பாத்திரத்தில் கைப்பிடி அளவு உப்பு தூவி மூடி வைத்தால் புளி நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

கோதுமை மாவில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து வைத்தால் மாவில் எந்த பூச்சி தொல்லையும் இருக்காமல் நீண்ட நாள் பதப்படுத்த முடியும்.

Exit mobile version