கத்திரிக்காய் பிடிக்காது என ஒதுக்குபவர்களுக்கு ஒருமுறை இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கத்திரிக்காய் சாதம் செய்து கொடுத்து பாருங்கள்!

நம்மில் பலர் சாப்பிடும் பொழுது கருவேப்பிலை, மல்லி இலை, புதினா இலை, கத்திரிக்காய் என பலவற்றை ஒதுக்கி வைத்து சாப்பிடுவது வழக்கம். பெரும்பாலும் கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் கத்திரிக்காவில் தவிர்க்க முடியாத பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கத்திரிக்காவை காரக்குழம்பாகவும் பொறியலாகவும் வைத்து சாப்பிடாத சமயங்களில் கத்திரிக்காய் வைத்து அருமையான கத்திரிக்காய் சாதம் செய்து லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விடுங்கள். அதன் சுவையில் மயங்கி மீண்டும் அதே சாதம் வேண்டும் என அடம் பிடிக்கும் அளவில் அமிர்தமாக இருக்கும்.

இந்த சாதம் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, கைப்பிடி அளவு வேர்க்கடலை, அரை தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காரவத்தல், கைப்பிடி அளவு தேங்காய் சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த பொருட்களை நன்கு சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றிக் கொள்ளலாம்.. இதை அணைக்கும் பொழுது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

ஹோட்டல் போல ஃபுட் கிரீம் எதுவும் சேர்க்காமல் வீட்டிலேயே கிரீமியான மஸ்ரூம் கிரேவி ரெசிபி!
இப்பொழுது நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் இருக்கும் எண்ணெயுடன் கத்திரிக்காய் நன்கு வதக்க வேண்டும். குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடம் மூடி போட்டு கத்திரிக்காயை மீண்டும் மீண்டும் கிளறி கொடுத்து வேக வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடத்தில் கத்திரிக்காய் நன்கு வந்து விடும். இந்த நேரத்தில் நாம் முதலில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை கடாயில் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வடித்து வைத்திருக்கும் சாதத்தை கடாயில் சேர்த்து கொள்ளலாம்.

மசாலா கலவையுடன் சாதம் நன்கு கலந்து வர வேண்டும். இந்த நேரத்தில் தேவைப்பட்டால் சுவை பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் சாதம் தயார். தனியாக மசாலா தயார் செய்து இந்த சாதம் தயாரிப்பதால் இதன் சுவை சற்று அதிகமாகவும் சிறப்பாக இருக்கும்.

Exit mobile version