பொதுவாக கோதுமை மாவு கையில் கிடைத்தவுடன் நம் மனதில் முதலில் நினைவுக்கு வருவது சப்பாத்தி அல்லது புஷ் புஷ் பூரி தான். இது இல்லாத பட்சங்களில் கோதுமை தோசையை பெரும்பாலான வீடுகளில் விரும்புவது இல்லை. இப்பொழுது கோதுமை மாவு வைத்து பாஸ்தா ஸ்டைலில் அருமையான ரெசிபி செய்வதற்கான வீடியோவை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்படி நன்கு பிசைந்த மாவை ஐந்து முதல் பத்து நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல சற்று தடிமனாக திரட்டி கொள்ள வேண்டும்.
தடிமனாக திரட்டிய பிறகு சிறிய அளவிலான மூடி வைத்து வட்ட வடிவில் சப்பாத்தி மாவின் மேல் வைத்து அழுத்தி சிறு சிறு உருண்டைகளாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி சிறு சிறு வட்ட வடிவில் நாம் பிரித்தெடுத்த சப்பாத்தி மாவு உருண்டைகளை பாஸ்தா வடிவிற்கு சுருளாக மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவுகளை அதனுள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடம் சப்பாத்தி மாவு சேர்த்து கொதித்தால் போதுமானது.
அதன் பிறகு பாஸ்தா வடிவில் செய்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளலாம்.
அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி மேகி மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
மேகி மசாலா இல்லாத பட்சத்தில் கறி மசாலாத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவு பாஸ்தாவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
கலக்கலான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் கார்லிக் எக் ரெசிபி!
நன்கு இரண்டு நிமிடம் கிளறி இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கோதுமை மாவு பாஸ்தா தயார். இந்த செய்முறையின் போது இஞ்சி பூண்டு விழுது தேவைப்பட்டால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான மற்றும் ஹெல்தியான பார்த்தா குழந்தைகளுக்கு தயார்.