கலக்கலான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் கார்லிக் எக் ரெசிபி!

ரெஸ்டாரன்ட் மற்றும் ஹோட்டல்களில் கிடைக்கும் பல வகையான உணவு முறைகளை வீட்டில் செய்து பார்த்து வீட்டில் உள்ளவர்களையும் திருப்திப்படுத்த ஆசைப்படுபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே ரெசிபிகள் செய்து அசத்த விரும்புவர்கள் ஒரு முறையாவது இந்த பட்டர் கார்லிக் எக் ரெசிபியை செய்து அசத்தலாம். வாங்க எளிமையான மற்றும் சுவையான பட்டர் கார்லிக் எக் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்…

இந்த எக் ரெசிபி செய்வதற்கு நான்கு முட்டைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் நான்கு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய 10 வெள்ளை பூண்டு, , ஒரு தேக்கரண்டி சில்லி பிளக்ஸ், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதை அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பட்டர் நன்கு உருகி வரும் நேரத்தில் நாம் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக மற்றொரு கடாயில் மீண்டும் ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி சில்லி பிளக்ஸ், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

களி போல கெட்டியாக இல்லாமலும், விரல்களில் ஒட்டாமல் கோயில் சுவையில் அமிர்தமான வெண்பொங்கல் செய்ய வேண்டுமா?

இதை அடுத்து ஒரு தேக்கரண்டி கான்பிளார் மாவை தண்ணீரில் நன்கு கரைத்து கடாயில் சேர்த்துக் கொள்ளலாம், அதன் பிறகு நான்கு தேக்கரண்டி பால், ஒரு தேக்கரண்டி ஆர்கனோ சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

நாம் சேர்த்து அனைத்து மசாலா பொருட்களையும் ஒரு முறை நன்கு கலந்து வெண்ணையில் பொறுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினான் சுவையான பட்டர் கார்லிக் எக் தயார்.

Exit mobile version