இந்த மூன்று பொருள் போதும் அடிக்கும் வெயிலுக்கு குளுகுளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்யலாம்!

தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதை தணிக்கும் விதமாக குளிர்ச்சியான ஆகாரங்கள் மீது நமது கவனம் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் எளிமையாக கிடைக்கும் தண்ணீர் பழம் வைத்து அருமையான ஐஸ்கிரீம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த ஐஸ்கிரீம் செய்வதற்கு வெறும் மூன்று பொருட்களை போதுமானது.. வாங்க எளிமையான முறையில் குளுகுளு ஐஸ் கிரீம் செய்வதற்கான ரெசிபி இதோ…

முதலில் இந்த ஐஸ்கிரீம் செய்வதற்கு நன்கு இனிப்பு சுவை உடைய தர்பூசணி பழம் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதை இரண்டாக நறுக்கி நடு பகுதியில் உள்ள சிவப்பு நிற சதை பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி பிரித்து எடுத்த சிவப்பு நிற சதைப்பகுதியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் தர்ப்பூசணி பழத்தின் சாருக்கு இணையாக ஒரு கப் பிரஷ் கிரீம், அரை கப் கண்டன்ஸ்டு மில்க் அல்லது மில்க்மெய்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காய் வைத்து ஒரு முறை அதேபோல செய்து பாருங்கள்! அருமையான வாழக்காய் சாப்ஸ் ரெசிபி!

மில்க்மெய்டு இல்லாத பட்சத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு அரைத்து வடிகட்டி இதன் சாற்றி தர்பூசணி பல கூட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை அப்படியே குளிர வைக்க வேண்டும். குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் நன்கு குளிர வைக்க வேண்டும்.

அடுத்த நாள் நாம் அதை நமது விருப்பத்திற்கு ஏற்ப நறுக்கி சாப்பிடலாம். குச்சியை போல அதே சுவையில் மிகவும் ஹெல்த்தியான குளுகுளு ஐஸ் கிரீம் வீட்டிலேயே தயார். மேலும் இந்த ஐஸ்கிரீம் செய்வதற்கு ஐந்து நிமிடமே போதுமானது. சுவையில் அட்டகாசமாகவும் இருக்கும். இந்த விடுமுறை நாட்களில் இது போன்ற ஐஸ்கிரீம்களை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுத்து மகிழலாம்.