பால் கொழுக்கட்டை ஒரு பாரம்பரியமான இனிப்பு வகையாகும். பெரும்பாலும் பண்டிகை நாட்களில், வீட்டில் விசேஷ நாட்களில் பாயாசம் போல வீட்டில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு இந்த பால் கொழுக்கட்டை. இதனை விநாயகர் சதுர்த்தி அன்று செய்து விநாயகருக்கும் படைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு பலவிதமான உணவுப் பொருட்களை நெய்வேத்தியம் செய்வது வழக்கம். அதில் இந்த பால் கொழுக்கட்டையும் ஒன்று இந்த பால் கொழுக்கட்டை மிக எளிமையான ஆனால் சுவை நிறைந்த ஒரு இனிப்பு வகையாகும்.
விநாயகர் சதுர்த்திக்கு சுவையான பால் பாயாசம்…! வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!
பால் கொழுக்கட்டையில் முதலில் கொழுக்கட்டை செய்வதற்கு அரை கப் அளவு பச்சரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் உருக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை கிளறி கொள்ளவும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதிக்கும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இதனை பிசைந்து கொள்ள வேண்டும். மாவை நன்கு பிசைந்ததும் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது ஒன்றரை லிட்டர் அளவு பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். பாலை காய்ச்சிய பிறகு உருட்டி வைத்திருக்கும். கொழுக்கட்டை உருண்டைகளை இந்த பாலில் சேர்த்து இதனை மூடி போட்டு வேக விட வேண்டும். பாலை குறைவான தீயில் வைத்து கொழுக்கட்டையை வேகவிடவும். குறைந்தது 15 நிமிடங்கள் நன்கு வேக விட வேண்டும்.
கொழுக்கட்டை வேகும் நேரத்தில் சர்க்கரைப்பாகு செய்துவிடலாம். இந்த பால் கொழுக்கட்டைக்கு தேவையான சர்க்கரை பாகு செய்வதற்கு 200 கிராம் அளவு வெள்ளத்தை எடுத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். சர்க்கரைப்பாகு காய்ச்சியதும் இதனை வடிகட்டி தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது கொழுக்கட்டையுடன் ஒன்றரை கப் அளவு தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அரை ஸ்பூன் அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும். இறுதியாக ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் வெல்லப்பாகை சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான பால் கொழுக்கட்டை தயாராகி விட்டது..!
விநாயகர் சதுர்த்திக்கு இதுபோல பிடி கொழுக்கட்டை செய்து பாருங்கள்!
இதனை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் செய்து கொடுக்கலாம்.