விநாயகர் சதுர்த்தி என்றதும் நம்முடைய நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். மோதகம், பூரண கொழுக்கட்டை, இனிப்பு பிடிக்கொழுக்கட்டை, உப்பு பிடிக்கொழுக்கட்டை என பலவிதமான கொழுக்கட்டைகளை செய்து நாம் விநாயகருக்கு படைத்து வழிபடுவோம். இதில் உப்பு பிடி கொழுக்கட்டை எளிமையான மற்றும் சுவையான கொழுக்கட்டை வகையாகும். இனிப்பு சுவை பிடிக்காதவர்களுக்கு அல்லது இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு இந்த உப்பு பிடி கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இது மிகவும் எளிமையான ஒரு கொழுக்கட்டை ஆகும். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் செய்து கொடுக்கலாம்.
விநாயகர் சதுர்த்திக்கு இதுபோல பிடி கொழுக்கட்டை செய்து பாருங்கள்!
இந்த உப்பு பிடி கொழுக்கட்டை செய்வதற்கு ஒரு கப் அளவு பச்சரிசி மாவை எடுத்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த மாவில் சிறிதளவு உப்பு இரண்டு ஸ்பூன் சூடான நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இதனை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சீரகம், கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு வர மிளகாய் ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பிறகு இதனை அப்படியே மாவில் கொட்டி விடவும்.
ஒரு மூடி தேங்காயை துருவி தேங்காய் பூவை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த இந்த மாவை நீளவாக்கில் உருட்டி விரல் பதியும்படி பிடி கொழுக்கட்டையாக பிடித்துக் கொள்ளவும்.
விநாயகர் சதுர்த்திக்கு அருமையான இந்த பால் கொழுக்கட்டை செய்து அனைவரையும் அசத்துங்க!
இப்பொழுது ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து இட்டலி தட்டில் இந்த பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான பிடி கொழுக்கட்டை தயார்! இதனை விநாயகர் சதுர்த்தி அன்று பிரசாதமாக செய்து விநாயகருக்கு படைத்து வழிபடலாம்.