விநாயகர் சதுர்த்திக்கு சுவையான பால் பாயாசம்…! வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!

விநாயகர் சதுர்த்தி தீபாவளிக்கு அடுத்ததாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. விநாயகர் பிறந்த தினமான ஆவணி மாதத்து வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை தாங்களே செய்து அலங்கரித்து விதவிதமான உணவுப் பண்டங்கள் சமைத்து அதனை விநாயகருக்கு படைத்து வணங்கி வழிபடுவர். கொழுக்கட்டை மோதகம் சுண்டல் பாயாசம் என பலவிதமான உணவு பண்டங்களை சமைத்து விநாயகருக்கு வழங்குவர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாக பால் பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

வருகின்ற வரலட்சுமி விரதத்திற்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்கள்…!

சுவை நிறைந்த இந்த பால் பாயாசம் செய்வதற்கு ஒன்றரை லிட்டர் பால் எடுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாலை நன்கு காய்ச்ச வேண்டும். கால் கப் அளவு பாஸ்மதி அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும் பாஸ்மதி அரிசியை சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அரிசி வறுப்பட்டதும் இதனை சிறிது நேரம் ஆற வைத்து காய்ச்சிய பாலில் சேர்த்து வேக விட வேண்டும்.

பாலில் சேர்த்த அரிசி நன்கு வெந்து வரும் பொழுது 200 கிராம் அளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். சீனி கரைந்து ஓரளவு கெட்டி பட்டதும் நிறுத்தி விடலாம். இப்பொழுது அடுப்பில் இரண்டு ஸ்பூன் அளவு நெய்யை உருக்கி அதனுடன் எட்டு முந்திரி பத்து திராட்சை ஆகியவற்றை வறுத்து இதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் இறுதியாக குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.

இந்தப் பால் பாயாசம் சூடாக பரிமாறுவதை விட சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த பாயாசத்தை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

விநாயகர் சதுர்த்திக்கு இதுபோல பிடி கொழுக்கட்டை செய்து பாருங்கள்!

அவ்வளவுதான் எளிமையான சுவை நிறைந்த பால் பாயாசம் தயாராகி விட்டது!