இந்த மாதிரி பூரணம் செய்து விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை பிடித்து பாருங்கள்…! பாராட்டு மழையில் நனைவிங்க!

கொழுக்கட்டையும் விநாயகர் சதுர்த்தியும் பிரிக்க முடியாத ஒன்று எனும் அளவிற்கு கொழுக்கட்டை என்று சொன்னாலே விநாயகர் சதுர்த்தி பண்டிகை தான் ஞாபகம் வரும். விநாயகர் சதுர்த்தி அன்று பலவிதமான பலகாரங்கள் செய்தாலும் இந்த கொழுக்கட்டை தனி சிறப்பு வாய்ந்தது. நாம் விரும்பும் இனிப்பு வகைகளை அருகில் உள்ள பேக்கரிகளில் நினைத்த நேரத்தில் வாங்கி உண்ண முடியும். ஆனால் இந்த கொழுக்கட்டை அப்படி அல்ல. நாம் எளிதாக கடையில் வாங்கி உண்ணும் பலகாரம் போன்றது அல்ல. சிறப்பான நாட்களில் வீட்டில் அரிதாக செய்வதால் இந்த கொழுக்கட்டைக்கு என்றைக்குமே ரசிகர்கள் உண்டு. இந்த விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாக இப்படி எள்ளு மற்றும் வேர்க்கடலை சேர்த்து கொழுக்கட்டை பிடித்துப் பாருங்கள். இந்த பூரணத்தின் சுவை உங்களை பாராட்டு மழையில் நிச்சயம் நனைய வைக்கும்.

விநாயகர் சதுர்த்திக்கு அருமையான இந்த பால் கொழுக்கட்டை செய்து அனைவரையும் அசத்துங்க!

இந்தக் கொழுக்கட்டைக்கு முதலில் பூரணம் தயாரிப்பதற்கு கால் கப் அளவு கருப்பு எள்ளை நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும் பிறகு அரை கப் நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும். மிதமாக வறுக்க வேண்டும் கரித்து விடக் கூடாது‌. இப்பொழுது வறுத்த வேர்க்கடலை மற்றும் எள்ளை ஒரு மிக்ஸி சாறு பொடியாக அடித்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு கப் அளவு வெல்லம் சேர்த்து அதை தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் வெல்லத்திற்கு அரை கப் தண்ணீர் சரியாக இருக்கும். தண்ணீரில் கரைத்த பிறகு இதனை வடிகட்டி மீண்டும் ஒரு கடாயில் சேர்க்கவும். கடாயில் வெள்ளத்தை சேர்த்த பிறகு அடித்து வைத்திருக்கும் வேர்க்கடலை மற்றும் எள்ளு பொடியை இதனுடன் சேர்க்க வேண்டும். நன்கு கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

இது கெட்டியாகும் நேரத்தில் ஒரு கப் அளவு தேங்காயை நெய்யில் நன்கு வறுத்து வெல்லம் மற்றும் எள்ளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து அனைத்தும் நன்கு இறுகி வரும் வரை கிளறவும். பூரணம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம்.

வருகின்ற வரலட்சுமி விரதத்திற்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்கள்…!

இப்பொழுது ஒரு கப் பச்சரிசி மாவை வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் உருக்கிய நெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும். ஒரு கப் அளவு நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மாவு மிருதுவாக இருக்கும் படி பிசைந்து அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும்.

இந்த உருண்டையை அதிக அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும். இதன் நடுவில் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து பாதி அளவில் மடித்து ஓரங்களை லேசாக அழுத்தி விடவும். இதுபோல் அனைத்து மாவிலும் உருண்டைகள் எடுத்து வட்ட வடிவில் தட்டி பூரணத்தை வைத்து மடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மடித்து வைத்த கொழுக்கட்டைகளை ஒரு இட்டலி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

விநாயகர் சதுர்த்திக்கு இந்த உப்பு சேர்த்த பிடி கொழுக்கட்டை செய்து பாருங்க.. எல்லோரும் பாராட்டுவாங்க!

அவ்வளவுதான் சுவையான எள்ளு வேர்க்கடலை பூரணம் வைத்த கொழுக்கட்டை தயார் இதனை விநாயகர் சதுர்த்திக்கு செய்து அசத்துங்கள்!