அட.. என்ன சுவை! கிராமத்து ஸ்டைலில் சின்ன வெங்காய காரக்குழம்பு!

வெங்காயத்தில் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தை சேர்த்து குழம்பு வகைகள் எது செய்தாலுமே அது கூடுதல் சுவையாக இருப்பதை நாம் உணர்ந்திருப்போம் சின்ன வெங்காயம் குழம்புக்கு சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடலுக்கும் நன்மை தரக்கூடிய ஒன்று. சின்ன வெங்காயத்தில் பல்வேறு மருத்துவ பயன்கள் நிறைந்திருக்கிறது. பல நோய்களுக்கு சின்ன வெங்காயம் தீர்வாகவும் இருக்கிறது. இந்த சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தி கிராமத்து ஸ்டைலில் சின்ன வெங்காய காரக்குழம்பு எப்படி வைக்கலாம் என்பதை பார்ப்போம்.

காலை உணவுக்கு சத்தான கொண்டைக்கடலை தோசை! இதை முயற்சித்து பாருங்கள்!

சின்ன வெங்காய காரக்குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் 100 கிராம் அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது 10 பல் பூண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தோல் உரித்த 200 கிராம் சின்ன வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பூண்டு நன்கு வதங்கியதும் இப்பொழுது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று மேஜை கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு இரண்டு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இதற்கு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியோடு தேவையான உப்பையும் சேர்த்து கரைத்து இதனுடன் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இப்பொழுது குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதற்கு கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் விட்டு நன்கு குழம்பை வற்ற விடலாம் அப்பொழுது இன்னும் சுவையாக இருக்கும். குழம்பு நன்கு வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.

ஐந்தே நிமிடத்தில் அசத்தலாய் செய்யலாம் அவல் வடை! சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்..

அவ்வளவுதான் கிராமத்து ஸ்டைலில் சுவையான சின்ன வெங்காய காரக்குழம்பு தயாராகி விட்டது.