கிராமத்து ஸ்பெஷல் என பல விதமான ரெசிபிகள் அடுத்தடுத்து பார்த்திருந்தாலும் தட்டப்பயிறு சேர்த்து வைக்கும் குழம்பிற்கு தனி சுவைதான். அதிலும் இந்த முறை தட்டப்பயறு, காய்கறிகள் மற்றும் கருவாடு சேர்த்து ஊரே மணக்கும் அளவிற்கு அருமையான கிராமத்து ஸ்பெஷல் கருவாட்டு குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் கருவாட்டில் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக தட்டப்பயிறு குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் நன்கு ஊறி இருக்க வேண்டும். அப்படி ஊறி இருக்கும் தட்டப்பயிரை குக்கரின் சேர்த்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி, அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி உளுந்து, 2 காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய 15 சின்ன வெங்காயம் அல்லது இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வெந்த பிறகு இரண்டு தக்காளி பழங்களை அரைத்து விழுதுகளாக சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
அடுத்ததாக இதில் இரண்டு கத்தரிக்காய், இரண்டு முருங்கை காய்கள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை அடக்கிக் கொள்ளலாம்.
ஆட்டுக்கால் பாயாவுடன் போட்டி போடும் சுவையில் சைவ பாயா! அதுவும் முருங்கக்காய் வைத்து…. ரெசிபி இதோ!
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் புளி கரைசல் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளியை நன்கு கரைத்து தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கூடுதலாக ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.
15 நிமிடம் கழித்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் தட்டப்பயிறு, கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாடு சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான கிராமத்து பக்குவத்தில் தட்டப்பயிறு கருவாட்டு குழம்பு தயார்.