கோடை காலத்திலும் சளி தொல்லையா? அருமையான வீட்டு மருந்து வெற்றிலை பூண்டு சாதம்…

கோடை காலங்களில் நம்மில் சிலருக்கு அதிகப்படியான வேர்வை வெளியேறுவதால் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். அதிலும் சிலருக்கு அதிகப்படியான வேர்வையின் காரணமாக சளி தொந்தரவு ஏற்பட்டு விடும் . இந்த சலிக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் வெற்றிலை, பூண்டு வைத்து ஒரு அருமையான சாதம் செய்து சாப்பிட்டால் சளியால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, வலி போன்றவற்றிலிருந்து எளிமையாக விடுபட்டு விடலாம்.

இந்த சாதம் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயில் அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெள்ளை எள், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும்.

அடுத்ததாக அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இறுதியாக இதில் இரண்டு பல் மலைப்பூண்டு சேர்த்து வறுக்க வேண்டும். மலைப்பூண்டு இல்லாத பட்சத்தில் சிறிய பல் பூண்டு மூன்று சேர்த்துக் கொள்ளலாம்.

வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். அரை கப் அரிசிக்கு இரண்டு வெத்தலை என்ற விதத்தில் வெத்தலைகளை எடுத்துக்கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த வெத்தலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெத்தலைகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். வெற்றிலை வதங்கும் பொழுது இரண்டு பல் வெள்ளை பூண்டை தோல் உரித்து தட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு வதங்கும் நேரத்தில் 10 சின்ன வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த வெங்காய விழுதுகளை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி பச்சை வாசனை சென்றவுடன் அரை கப் தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும்.

கறி குழம்பு சுவையை மிஞ்சும் அளவிற்கு சுவையான முள்ளங்கி குழம்பு!

இப்பொழுது இறுதியாக அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், நாம் முதலில் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இதில் நாம் வடித்து ஆற வைத்திருக்கும் வெள்ளை சாதம், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கினால் வெற்றிலை பூண்டு சாதம் தயார்.

Exit mobile version