களி போல கெட்டியாக இல்லாமலும், விரல்களில் ஒட்டாமல் கோயில் சுவையில் அமிர்தமான வெண்பொங்கல் செய்ய வேண்டுமா?

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மிகக் குறைவாக இருந்தாலும் அதன் சுவை நாவை விட்டு அகலாமல் அப்படியே இருக்கும். பிரசாதத்திற்காகவே கோயிலுக்கு செல்லும் கூட்டங்களும் நம்மில் பலர் உண்டு. அப்படி கோயில்களில் கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை விட அங்கு வழங்கப்படும் சூடான வெண்பொங்கலுக்கு ரசிகர்கள் அதிகம் தான். கோவில் சுவையில் களி போல கெட்டியாகவும் இல்லாமல் விரல்களில் ஒட்டாமல் நெய் மணக்கும் வாசகத்தில் அருமையான வெண்பொங்கல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

வெண்பொங்கல் செய்வதற்கு நாம் பச்சரிசியை பயன்படுத்தி செய்ய வேண்டும். அந்த வகையில் ஒரு அகலமான குக்கரின் ஒரு கப் பச்சரிசி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப்பிற்கும் சற்று குறைவாக பாசிப்பருப்பு எடுத்துக் கொள்ளலாம்.

பாசிப்பருப்பை லேசாக நெய் சேர்த்து வறுத்து அதன் பின் பொங்கல் செய்யும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும். ஒரு கப் பச்சரிசிக்கு முக்கால் கப் பாசிப்பருப்பு என்பது அளவு. அரிசி மற்றும் பருப்பை இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

இதனுடன் நான்கு முதல் ஐந்து கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட வேண்டும். அரிசி மற்றும் பருப்பு ஒரு சேர கொதித்து வரும் நேரத்தில் குக்கரை மூடி மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

குறைந்தது நான்கு முதல் ஐந்து விசில்கள் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். விசிறிகள் வந்து அழுத்தம் குறைந்த பின் குக்கரை திறந்து கொள்ளலாம். மீண்டும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். இப்பொழுது பொங்கலுக்கு தாளிப்பு தயார் செய்து கொள்ளலாம்.

இதற்காக ஒரு அகலமான கடாயில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் மற்றும் நெய் சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, துருவிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி அளவு பல்லு பல்லாக கீறிய தேங்காய், பாதியாக உடைத்த பத்து முந்திரி பருப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயம் இவற்றை ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயம் போதும் பத்தே நொடியில் அருமையான மசாலா புலாவ் தயார்!

கடாயின் சேர்த்த இஞ்சி, முந்திரி பருப்பு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தாளிப்பு தயாராக மாறிவிட்டது. இதை நாம் வேக வைத்திருக்கும் பொங்கலில் சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை கிளறிக்கொடுத்து பரிமாறினால் சுவையான கோவில் ஸ்டைல் வெண்பொங்கல் தயார். இந்த வெண்பொங்கலுக்கு தேங்காய் சட்னி, என்ன கெட்டி சாம்பார் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். இதனுடன் சேர்த்து ஒரு வடை ஒன்று வைத்து சாப்பிடும் பொழுது விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.