அசைவ கோலா உருண்டையுடன் போட்டி போடும் வகையில் சூப்பரான வாழைப்பூ கோலா உருண்டை!

சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை என்பது அசைவ பிரியர்களின் பிடித்தமான அசைவ உணவுகளில் ஒன்று. அதை சுவையில் சைவ பிரியர்களுக்கு பிடித்த வகையில் வாழைப்பூ வைத்து அருமையான கோலா உருண்டை செய்யலாம் வாங்க.. இந்த வாழைப்பூ கோலா உருண்டை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

இந்த கோலா உருண்டை செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் ஒன்று, சின்ன வெங்காயம் 10, வெள்ளை பூண்டு ஐந்து, ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி கசகசா, ஒரு தேக்கரண்டி பொரிகடலை சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.

இவற்றை அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. அரை தேக்கரண்டி உப்பு, அரைத்து கரண்டி மிளகாய் தூள், நம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வாழைப்பூவை இதனுடன் சேர்ந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. சற்று பரபரமன அரைத்துக் கொண்டால் போதுமானது. அரைத்த இந்த விழுதுகள் நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பொரிகடலை மாவாக சேர்த்து மாவை கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மல்லி இலைகளை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது கோலா உருண்டை தயாராக உள்ளது.

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத நார்ச்சத்து நிறைந்த கருவேப்பிலை தொக்கு!

ஒரு அகலமான கடாயில் பொரித்தெடுப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதில் நாம் உருட்டி வைத்திருக்கும் கோலா உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். முன்னும் பின்னும் இருபுறமும் பொன்னிறமாக பொறிந்ததும் தட்டிற்கு மாற்றிவிடலாம்.

மாலை நேரங்களில் டீ காபி குடிக்கும் பொழுது இந்த கோலா உருண்டை வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version