இந்த தொக்கு இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலையில் நன்கு கழுவி சுத்தம் செய்து தனித்தனி இலைகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
அகலமான கடாயில் ஒன்றரை தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து பார்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். கடுகு வெடித்து வரும் நேரத்தில் அடுப்பை அணைத்துக் கொள்ளலாம்.
வறுத்த இந்த பொருட்கள் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய், காரத்திற்கு ஏற்ப எட்டு முதல் 10 காய்ந்த வத்தல், ஒரு எலுமிச்சை பழ அளவு புளி, கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் கருவேப்பிலை முறுமுறுவென வரும் அளவிற்கு எண்ணெயில் வறுத்தெடுக்க வேண்டும். வறுத்த இந்த பொருட்கள் சூடு தணிந்ததும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். எந்த கலவையை மிக்ஸியில் அரைக்கும்பொழுது ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இதை மிக்ஸியில் அரைக்கும்பொழுது தண்ணீர் சேர்த்து அரைக்காமல் பல நாட்கள் பதப்படுத்த வேண்டும் என்பதால் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீருக்கு பதிலாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது குறிப்பு.
மீண்டும் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள், ஒரு கப் பொடியாக நறுக்கிய வெள்ளைப்பூண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.வெள்ளை பூண்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது வெள்ளைப் பூண்டு பொன்னிறமாக மாறியதும் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை விழுது, அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி சேர்த்து எண்ணையுடன் கலக்க வேண்டும். இந்த கலவையை மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
இப்பொழுது சுவையான கருவேப்பிலை தொக்கு தயார். இந்த தொக்கு குறைந்தது ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருப்பதால் நாம் விரும்பும் நேரங்களில் நார்ச்சத்தை நாம் உணவின் மூலமாக எடுத்துக் கொள்ள முடியும். இந்த கருவேப்பிலை தொக்கு சூடான சாதம், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி என அனைத்திற்கும் சிறந்த பொருத்தமாக அமைந்திருக்கும்.