அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில் காரசாரமாக சாப்பிட தோன்றும் பொழுது நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது வத்தக் குழம்பு தான். சூடான சாதத்தில் வத்தக்குழம்பு வைத்து சுட்ட அப்பளம் ஒன்று போதும் பல தட்டுகள் சாப்பாடு வரிசையாக செல்லும். அந்த அளவிற்கு தரமான காரத்துடன் மிதமான புளிப்புடன் வட்டக் குழம்பு அருமையாக இருக்கும். மேலும் இந்த குழம்பு ஒருநாள் வைத்து ஒரு வாரம் வரையும் திகட்டாமல் சாப்பிடலாம். வாங்க வீட்டிலேயே வறுத்து அரைத்த மசாலா வைத்து வத்த குழம்பு செய்வதற்கான ரெசிபி இதோ…
குழம்பு செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம்.
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், எடுத்து தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
இதனுடன் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் பத்து காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் சூடு தணியும்படி ஓரமாக வைத்துவிடலாம். அந்த நேரத்தில் ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கைப்பிடி அளவு சுண்ட வத்தல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
வறுத்த சுண்டவத்தலை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும். மீதம் இருக்கும் அதே எண்ணெயில் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் 10 பல் வெள்ளை பூண்டு, 15 சின்ன வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தக்காளி பழத்தை விழுதுகளாக அரைத்து குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி விழுது எண்ணெயோடு சேர்த்து ஒரு நிமிடம் வதங்கியதும் நாம் முதலில் வறுத்து மசாலாவை பொடி செய்து கொள்ளலாம்.
இந்த மசால் பொடி இரண்டு தேக்கரண்டி, மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, உப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வறுத்து வைத்திருக்கும் சுண்டக்காயின் பாதி மற்றும் பாதி கைப்பிடி அளவு தேங்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த விழுதுகளை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். மசாலாக்களில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எப்பொழுதும் போல ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற வீதத்தில் இரண்டு கப் தண்ணீரை குக்கரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் சூடாகி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்திருக்கும் ஒரு கப் அரிசியை பூக்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது மிதமான தீயில் குக்கரில் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும். மூன்று முதல் நான்கு விசில்கள் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அழுத்தம் குறைந்ததும் குக்கரை திறந்து கைப்பிடி அளவு மல்லி இலைகளை பொடியாக நறுக்கி தூவி கிளறி இறக்கினால் சுவையான வத்தக்குழம்பு சாதம் தயார்.