வாழைக்காய் வைத்து ஒரு முறை அதேபோல செய்து பாருங்கள்! அருமையான வாழக்காய் சாப்ஸ் ரெசிபி!

சமைப்பதற்கு எளிமையாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்க கூடிய காய்கறிகளில் ஒன்று வாழைக்காய். வாழக்காய் வைத்து பொதுவாக வறுவல், தேங்காய் சேர்த்து கூட்டு பொரியல் என பல ரெசிபிகள் செய்திருந்தாலும் யாரும் எதிர்பார்க்காத விதமாக சற்று வித்தியாசமான சுவையில் வாழைக்காய் வைத்து இன்று அருமையான சாப்ஸ் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு அடி கனமான கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இரண்டு வாழைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரைத்தக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த வாழைக்காய் மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயுடன் அரை தேக்கரண்டி சோம்பு, ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளலாம். அடுத்ததாக நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வெந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

அடுத்ததாக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து இந்த மசாலாவை நன்கு கொதிக்க விட வேண்டும். மசாலா கொதித்து வரும் நேரத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளலாம். இந்த கலவை நன்கு கொதித்து கெட்டியாக வரும் நேரத்தில் இவற்றை ஆரம்பிக்க வேண்டும்.

ரம்ஜான் ஸ்பெஷல் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி! சுவை மாறாத ரெசிபி இதோ….

அதன் பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது மீண்டும் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரைத்தக்கரண்டி சீரகம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை கடாயில் சேர்த்து எண்ணெயோடு கலந்து கொள்ள வேண்டும். இந்த தக்காளி, வெங்காய விழுது எண்ணெயோடு சேர்ந்து நன்கு வதங்கி வரும் நேரத்தில் நாம் பொறித்து வைத்திருக்கும் வலக்காய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான வாழைக்காய் சாப்ஸ் தயார்