ஐந்தே நிமிடத்தில் மகாராஷ்டிரா ஸ்டைலில் மொறு மொறு வாழைக்காய் வறுவல்!

வீட்டில் எளிமையாக மற்றும் அனைவருக்கும் பிடித்த காய்கறிகள் உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய். ஐந்தே நிமிடத்தில் தயாராகும் இந்த வாழக்காய் வைத்து எப்போதும் போல கூட்டு பொரியல் என செய்யாமல் சற்று வித்தியாசமாக மகாராஷ்டிரா ஸ்பெஷல் மொறு மொறு வாழைக்காய் வறுவல். காரசாரமாக இந்த வருவல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி ரவை, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி சோம்பு தூள், தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி சில்லி பிளஸ், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி சாட் மசாலா, , கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது வாழைக்காய் நீளவாக்கில் சற்று தடிமனாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான தட்டில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் ஒன்றன் பின் ஒன்றாக அடிக்கி அதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை மேலே தூவி தண்ணீர் கலக்காமல் பிசைந்து கொள்ள வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ரெசிபியாக சத்தான மற்றும் சுவை மிகுந்த கடலை புட்டு!

வாழைக்காய் மசாலாவுடன் குறைந்தது 10 முதல் 15 நிமிடம் அப்படியே ஊற வேண்டும். அதன் பிறகு ஒரு அகலமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வாழைக்காய் பொன்னிறமாக முன்னும் பின்னும் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் தயார். இந்த வருவல் சூடான சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.