சத்துகளுக்கு பஞ்சமே இல்லாமல் மொறு மொறு வடை ரெசிபி! ஒருமுறை ட்ரை பண்ணலாம் வாங்க…

பொதுவாக வடை அதிகப்படியான எண்ணெய் பலகாரம் என்பதால் பலர் இதை விரும்புவது இல்லை. அதில் இருக்கும் சத்துக்களை கணக்கில் கொள்வதை விட சேர்ந்து இருக்கும் எண்ணெயின் அளவு அதிகமாகவே இருப்பதால் பலர் உடல் நிலைக்கு இது சரியானதாக அமைவதும் இல்லை. விடுமுறை கருப்பு உளுந்து, பாசிப்பயிறு என உடலுக்கு ஆரோக்கியம் தரும் பயிர்கள் வைத்து வெளியே முறுமுறுவென உள்ளே சத்து நிறைந்த வடை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

பாத்திரத்தில் ஒன்றில் ஒரு கப் பசிப்பயிறு, ஒரு கப் கருப்பு உளுந்து, ஒரு கப் பாசிப்பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், கால் கப் பச்சரிசி சேர்த்து நன்கு இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனுடன் இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் கழித்து நன்கு ஊறி இருக்கும் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் 5 பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய இரண்டு துண்டு இஞ்சி, சின்ன வெங்காயம் ஐந்து, . இரண்டு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவு வடைக்கு அரைப்பதால் கவனமாக அரைக்க வேண்டும். அதாவது தண்ணீர் தெளிக்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தெளிக்காமல் மாவு சற்று நீர்த்து இருப்பதை உணர்ந்தால் அரிசி மாவு கலந்து கொள்ளலாம்.

இப்பொழுது இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வடை செய்வதற்கு மாவு தயாராக உள்ளது.

அனுபவித்து ரசித்து ருசித்து சாப்பிட விரும்புபவர்களுக்கு எளிமையான ரெசிபி!

ஒரு அகலமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை பதத்திற்கு மாற்றி போட்டு எடுக்க வேண்டும். வடையில் எண்ணெய் குடிக்க வேண்டாம் என விரும்புபவர்கள் மாவுடன் ஒரு தேக்கரண்டி ரவை சேர்த்து நன்கு கலந்து வடையாக தட்டி எடுக்கலாம்.

ரவை சேர்த்து மாவு பிசைந்து வடை செய்யும் பொழுது எண்ணெய் அதிகமாக எடுக்க வாய்ப்பு இல்லை. இப்பொழுது முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சத்து நிறைந்த புரோட்டின் வடை தயார். இந்த வடையை தாராளமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியபடி சாப்பிடலாம்.