கேரளாவில் மிகப் பிரபலமடைந்த உள்ளி தீயல்!

கேரளாவின் விசேஷ நாட்களில் உள்ளி தீயல் இல்லாத பந்தி இருக்காது. அந்த அளவிற்கு இந்த உள்ளி தீயலுக்கு தனி மவுசுதான். இதை சாப்பிட நாம் கேரளா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நம் வீட்டிலேயே செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி தனியா, காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். தேங்காய் பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த தீயல் செய்வதற்கு புதிய தேங்காய்களை பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும். வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடாயில் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி கடுகு, இரண்டு காய்ந்த வத்தல் காஞ்ச மிளகாய் கருவேப்பிலை, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பாட்டி கை பக்குவத்தில் அருமையான மாலை நேர பலகாரம்! காரசாரமான தட்டை ரெசிபி இதோ!

கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் 15 முதல் 20 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் இரண்டு கப், தேவையான அளவு தண்ணீர், சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடம் இந்த குழம்பு வை கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக சுண்டி குழம்பு கெட்டியாக மாறி வரும் அப்பொழுது சுவையான உள்ளி தீயல் தயார்.

Exit mobile version