சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு வித்தியாசமான சமையல் செய்து கொடுத்தாலும் சில நேரங்களில் வேண்டாம் என அடம்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி விருப்பம் இல்லாத குழந்தைகளுக்கும் முறுமுறுவென வடகம் செய்து கொடுத்து சாப்பிட சொல்லும்பொழுது ஆசையாக விரும்பி சாப்பிடுவார்கள். வடகத்தின் சுவையில் ஒரு தட்டு சோறும் நிமிடத்தில் காலியாகி விடும். இந்த முறை வெயில் காலத்தில் நம் வீட்டிலேயே எளிமையான முறையில் தக்காளி வடகம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் இரண்டு டம்ளர் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்த ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து குறைந்தது 5 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
5 மணி நேரம் கழித்து ஊற வைத்திருக்கும் பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக அதை மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த தக்காளி பழம் மூன்று அல்லது நான்கு, இரண்டு பெரிய வெங்காயம், காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் மூன்று முதல் ஐந்து, ஐந்து பல் வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரைத்த விழுதுகளையும் பச்சரிசி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது இந்த மாவுடன் ஒரு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் வீதம் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதன்படி ஆறு டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து நன்கு மாவை கரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கலந்து கொடுக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் வரை கைவிடாமல் கலந்து கொடுக்க வேண்டும். மாவை வேக வைக்கும் பொழுது நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். பத்து நிமிடத்தில் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆரம்பிக்க வேண்டும்.
கேரட் பருப்பு உசிலி சாப்பிட்டதே இல்லையா… வாங்க இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணலாம்!
இப்பொழுது மாவு தயாராக மாறி உள்ளது இதை இடியாப்பம் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றி நமக்கு விருப்பமான வடிவத்தில் ஒரு ஈரமான துளி துணியில் பிழைந்து விட வேண்டும். இப்படி இரண்டு நாட்கள் வரை இதை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து துணியில் இருந்து வடகத்தை பிரித்து எடுத்து விடலாம்.. அதன் பிறகு மீண்டும் ஒரு நாள் வெயிலில் காயவைத்தால் சுவையான தக்காளி வடகம் தயார்.. இறுதியாக சூடான எண்ணையில் பொரித்து எடுத்தால் முறுமுறுவென தக்காளி வடகம் நமக்கு கிடைத்துவிடும். இந்த வடகம் குறைந்தது ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது மேலும் சாப்பிடுவதற்கு சுவையானதாகவும் இருக்கும்.