மூன்று தக்காளிப்பழம் போதும்… ஐந்தே நிமிடத்தில் அருமையான கிரேவி தயார்!

வீட்டில் பெரிதாக காய்கறிகள் இல்லாத சமயங்களில் தக்காளி பழம் வைத்து அருமையான கிரேவி தயார் செய்யலாம் வாங்க. இந்த கிரேவி குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடத்தில் தயாராகி விடும். மேலும் இது செய்வதற்கு தக்காளி ஒன்றே போதுமானது. இந்த கிரேவி சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் மிக கச்சிதமான பொருத்தமாக அமைந்திருக்கும்.

இந்த தக்காளி கிரேவி செய்வதற்கு முதலில் ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். இந்த கலவையை மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு குக்கரில் நீளவாக்கில் நறுக்கிய மூன்று தக்காளிப்பழம், ஐந்து முதல் பத்து வெள்ளை பூண்டு, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் 5 மிளகாய், ஐந்து சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி இந்த கலவையை நன்கு வதக்க வேண்டும். வதக்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி சீக்கிரம் வெந்துவிடும். தக்காளி நன்கு வெந்து அதன் தோல் பிரிந்து வர வேண்டும்.

அந்த தருணத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை குக்கரில் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மீண்டும் ஒரு முறை உப்பு சரிபார்த்து மூன்று விசில்கள் வைக்க வேண்டும்.

மூன்று விசில்கள் வந்ததும் குக்கரின் அழுத்தம் குறைந்து திறந்து பார்த்தால் சுவையான தக்காளி கிரேவி தயார். இந்த கிரேவிக்கு மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்து கலந்து கொள்ளலாம்.

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மிருதுவான பால் கொழுக்கட்டை!

மேலும் இறுதியாக கைப்பிடி அளவு நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும். இந்த கிரேவியை சூடான சாதம், இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடும் போது சற்று புளிப்பாக காரசாரமாக இருக்கும். இந்த தக்காளி கிரேவியை நாம் சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது அதற்கு சைடிஷ் ஆக இரண்டு அப்பளம், உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் வறுவல் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

மேலும் இந்த தக்காளி கிரேவி செய்யும் பொழுது விருப்பப்பட்டால் உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

Exit mobile version