தேங்காய் சட்னிசெய்வதா? தக்காளி சட்னி செய்வதா என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு முறை இந்த தண்ணீர் சட்னி செய்து கொடுத்து பாருங்கள்…

பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல் என அனைத்திற்கும் நம் வீடுகளில் சட்னி செய்வது வழக்கமான ஒன்று. . ஆனால் எப்போதும் ஒரே மாதிரியாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி என்ன செய்யாமல் சற்று வித்தியாசமாக முயற்சி செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிட அதிக வாய்ப்புள்ளது.. ஒரு முறை சுவை அதிகமான தண்ணீர் சட்னி செய்து ஒரு முறை கொடுத்து பாருங்கள். மீண்டும் மீண்டும் எனக்கு கேட்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்..

ஒரு அகலமான பாத்திரத்தில் நான்கு அல்லது ஐந்து தக்காளிகளை நான்காக கீரி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு பெரிய பச்சை மிளகாய், ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மூடி போட்டு ஐந்து முதல் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

அந்த நேரத்தில் ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடம் கழித்து வேக வைத்த தக்காளி பழங்களை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி தோள்களை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

மெரினா கடற்கரையோர மீன் வருவல்… வீட்டிலேயே மணக்க மணக்க மசாலா அரைத்து செய்வதற்கான ரெசிபி இதோ!

இப்பொழுது நாம் வேகவைத்திருக்கும் தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கூடுதலாக தண்ணீர், தேவையான அளவு உப்பு கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். பரிமாறுவதற்கு முன்பாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால் தண்ணீர் சட்னி தயார்.